ஜூன் மாதம் 2025 ராசி பலன்கள் - கன்னி

By செய்திப்பிரிவு

இந்த ஜூன் மாதம் 8 மற்றும் 9-ம் இடத்தில் சுக்கிரன் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் காணப்படும்.கணவன் மனைவி உறவு பலப்படும் திடீர் பண வரவுகளால் நினைத்த காரியம் நடக்கும்.

வருட கோள்களில் ராகு 6,ம் இடத்தில் நற்பலன்களை வழங்கி வருவார்  ஆறாம் இடத்தில் ராகு பகவான் அமர்ந்திருப்பதால் ஆயுள் ஆரோக்கியம் கூடும் நோய் நொடிகள் இல்லாத நிலை உருவாகும் ஏற்கனவே இருந்த நோய்கள் குணம் அடையும் மருத்துவ விரையங்கள் கட்டுக்குள் வரும்.

மாத பிற்பாதி சூரியனும் புதனும் பலம் பெற்று 10,ம் இடத்திலும் புதன் 10-11ம் இடங்களில் சஞ்சாரம் செய்வார்கள்.
அபார ஞாபக சக்தி உண்டாகும்

சுறுசுறுப்பாக காணப்படுவீர்கள் அரசியல் செல்வாக்கு கூடும் புதிய பொலிவுடன் காணப்படுவீர்கள் கவலைகள் மறையும் எதையும் சாதிக்கும் தைரியமும் தன்னம்பிக்கையும் பிறக்கும் கூட்டுத் தொழில் மூலமாக நல்ல வருமானத்தை காணலாம்.
தந்தை மகன் உறவு பலப்படும் பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் காண்பீர்கள்.

12-ம் இடமான  விரைய ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதால் அவசர முடிவுகளால் பணம் இழக்கும் அபாயம் உள்ளது யாரிடமும் முன் கோபத்தை காட்டாதீர்கள் நிதானமும் பொறுமையும் மிக அவசியம்.

7ம் இடத்தில் சனிபகவான் சஞ்சரிப்பதால் கணவன் மனைவிக்குள் மன ஸ்தாபங்கள் உண்டாகும்.குடும்ப உறவுகளுக்குள் விட்டுக்கொடுத்து போவது நன்று.

ராசிக்கு 12ல் கேது இருப்பதால் மனக்குழப்பங்கள் காணப்படும் வேலைக்கு போகும் எண்ணம் இருக்காது ஆன்மீக தலங்கள் கோயில் வழிபாடு என சுபச் செலவுகள் உண்டாகும் ஆன்மீக எண்ணங்கள் அதிகரிக்கும்.

குரு பகவான்  10-ம் இடத்தில் சஞ்சரிப்பதால் புதிய தொழில்களுக்காக முதலீடுகள் எதையும் போட வேண்டாம் வரக்கூடிய வருமானம் வந்துக்கொண்டே இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைப்பது நன்று.

ஜூன் 21,22,சந்திராஷ்டமம்.

பரிகாரம்
வாரம் தோறும் வரக்கூடிய செவ்வாய்க்கிழமைகளில் ராகுகால வேளையில் துர்கை அம்மனுக்கு செவ்வரளிபூ சாற்றி இரண்டு எலுமிச்சை பழங்களால் நல்லெண்ணை ஊற்றி 4 தீபங்களாக ஏற்றி வரவும் .
நல்லதே நடக்கும்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE