ஜூன் மாதம் 2025 ராசி பலன்கள் - சிம்மம்

By செய்திப்பிரிவு

ராசிக்கு 10 மற்றும் 11-ம் இடங்களில் சூரியன் பலம் பெற்று சஞ்சரிப்பதால் சுறுசுறுப்பாக காணப்படுவீர்கள் அரசாங்க உதவிகளும் அரசாங்க ஆதரவும் கிடைக்கும் அரசியல் செல்வாக்கு கூடும் நினைத்த காரியம் யாவும் நடக்கும்.

போட்டி தேர்வுகளில்வெற்றி பெறுவீர்கள் தந்தை மகன் உறவு பலப்படும் புதிய சொத்துக்கள் வாங்க நேர அமையும்.
இம்மாதம் புதனும் சற்று பலத்துடன் காணப்படுவதால் புது பொலிவுடன் காணப்படுவீர்கள் நினைத்தது யாவும் கைகூடும். கூட்டுத்தொழில் மூலமாக நல்ல லாபம் கிடைக்கும் வேலை இழந்தவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும்.

ஜூன் 29-ம் தேதிவரை சுக்கிரன் ஒன்பதாம் இடத்தில் பலத்துடன் சஞ்சரிப்பார் இதனால் கணவன் மனைவி உறவு பலப்படும் புதிய வாகன யோகம் உண்டாகும் சிலருக்கு புது வீடு கட்டும் யோகம் உண்டு. பண தேவைகள் பூர்த்தியாகும்.

ராசிக்கு 11-ம் இடமான லாப ஸ்தானத்தில் குரு பகவான் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும் தடைபெற்ற திருமணங்கள் தடையின்றி அமையும் தொழில் வியாபாரங்கள் செழிப்படையும் நல்ல லாபத்தை தரும்.

இம்மாதம் செவ்வாய் 12 மற்றும் ஒன்றாம் இடங்களில் சஞ்சரிப்பதால் முன் கோபம் அதிகமாக காணப்படும் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள் சகோதரர்களிடம் விட்டுக் கொடுத்து செல்லுங்கள் அவசர முடிவுகள் தவிர்க்கவும்.

ராசிக்குள் கேதுவும் ஏழாம் இடத்தில் ராகுவும் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனத்தை செலுத்துங்கள் அடிக்கடி உடல் நல பிரச்சனைகள் உண்டாகும் அலைச்சல் அதிகமாக காணப்படும் கணவன் மனைவிக்குள் விட்டுக் கொடுத்து செல்லுங்கள்.

அஷ்டம ஸ்தானமான 8-ம் இடத்தில் சனிபகவான் சஞ்சரிப்பதால் பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில் மிகுந்த கவனத்தை செலுத்துங்கள் முகம் தெரியாத நபர்களிடம் எச்சரிக்கையாக பழகுங்கள் யாருக்கும் ஜாமீன் கையெழுத்துகள் போடாதீர்கள்.
ஜூன் 19,20,21 சந்திராஷ்டமம்.

பரிகாரம்!
வாரம் தோறும் வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமைகளில்  சூரிய உதய நேரத்தில் அருகில் உள்ள சிவாலயத்தில் நவகிரக சூரியன் வழிபாடும் பிரதோஷ நாளில் சிவன் வழிபாடும் நன்மையை தரும் நல்லதே நடக்கும்.

 

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE