ஜூன் மாதம் 2025 ராசி பலன்கள் - கடகம்

By செய்திப்பிரிவு

மாத முற்பாதிவரை சூரியன் 11-ம் வீட்டில் நற்பலன்களை வழங்குவார் புதிய பதவிகள் பட்டங்கள் தேடி வரும் அரசியல் செல்வாக்கு கூடும் .. போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள்.

மாத பிற்பாதி 12ம் இடத்தில் பலவீனபடுகிறார். இம்மாதம் செவ்வாய் 1 மற்றும் 2-ம் இடத்தில் பலவீனமாக காணப்படுவதால் முன்கோபம் அதிகமாக காணப்படும் யாரையும் எடுத்தெறிந்து பேசவேண்டாம். அவசர முடிவுகள் தவிர்க்கவும்.

வருட கோள்களில் குரு 12ம் இடமான வரைய ஸ்தானத்தில் இருப்பதால் தன விரையங்கள் உண்டாகும் பண விவகாரங்களில் கவனமாக இருக்கவும் யாருக்கும் ஜாமீன் கையெழுத்துக்கள் போடாதீர்கள்.

ராகு 8ம் இடத்திலும் கேது 2ம் வீட்டிலும்  இருப்பதால் மன அழுத்தங்கள் காணப்படும் கணவன் மனைவிக்குள் தேவையற்ற வீண் வாக்குவாதங்கள் உண்டாகும் ஈகோ பிரச்சனைகள் தலைதூக்கும்.

குடும்ப உறவுகளுக்குள் விட்டுக்கொடுத்து போவது நன்று. அன்னியமொழிகாரர்களிடம் எச்சரிக்கையாக பழகுங்கள்.

இம்மாதம் 29ம் தேதிவரை சுக்கிரன் 10ம் இடத்தில் பலவீனப்படுகிறார் . வாகனங்கள் செலவு வைக்கும். வீடு பழுது பார்க்க நேரும் சிலர் வேறு வீட்டுக்கு குடி போவார்கள்.

9ம் இடத்தில் சனிபகவான் சஞ்சரிப்பதால் பூர்வீக சொத்து பிரச்சனைகள் உண்டாகும் பங்காளிகளுக்குள் விட்டுக்கொடுத்து போவது நல்லது யாரையும் பகைத்து கொள்ளாதீர்கள் தந்தையின் உடல் நலத்தில் கவனம் செலுத்துங்கள்.

இம்மாதம் புதனும் 12 மற்றும் ராசிக்குள் வலம் வருவதால் ஞாபக மறதி அதிகமாக காணப்படும். ஏமாற்று பேர்வழிகளிடம் சிக்கி பணத்தை இழக்ககூடும். முன்பின் அறிமுகம் இல்லாத நபர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்.

ஜூன் 16, 17,18, சந்திராஷ்டமம்.

பரிகாரம்!
வாரம் தோறும் வரக்கூடிய சனிக்கிழமைகளில் நவகிரக வழிபாடு செய்து வாருங்கள் அமாவாசை திதியில் குடும்பத்துடன் குலதெய்வ கோவிலுக்கு சென்று வாருங்கள் நல்லதே நடக்கும்.

 

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE