ஜூன் மாதம் 2025 ராசி பலன்கள் - மிதுனம்

By செய்திப்பிரிவு

மிதுன ராசி நண்பர்களே இந்த ஜூன் மாசம் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கும் என்பதை காண்போம் சுக்கிரன் பலம் பெற்று 11 மற்றும் 12-ம் இடங்களில் சஞ்சாரம் செய்வதால் சுக்கிரனால் நன்மைகள் பல காணலாம் குடும்பத்தில் அமைதியும் சந்தோஷமும் நிலமும் பண தேவைகள் பூர்த்தியாகும் தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும்.

புதிய வாகன யோகம் உண்டாகும்.

பத்தாம் இடத்தில் சனிபகவான் இருப்பதால் புதிய தொழில் மூலமாக நல்ல லாபம் கிடைக்கும் பூர்வீக சொத்து பிரச்சனைகள் முடிவுக்கு வரும் வழக்குகள் வாபஸ் ஆகும் குடும்ப உறவினருக்குள் நல்இணக்கம் உண்டாகும்.

இம்மாதம் 7-ம் தேதி செவவாய் 2-ம் இடத்தில் இருந்து 3-ம் இடத்துக்கு செல்வதால் செவவாய் பலமாக காணப்படுவார் இதனால் சுறுசுறுப்பாக காணப்படுகிறார்கள் நினைத்த காரியம் யாவும் வெற்றியைத் தேடித் தரும் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள் சகோதர வழியில் நன்மைகள் பல காணலாம் அவர்களின் உதவிகளும் கிடைக்கும்.

மூன்றாம் இடத்தில் கேது இருப்பதால் உடல் ஆரோக்கியம் காணப்படும் மருத்துவ விரைய செலவுகள் கட்டுக்குள் வரும் ஆன்மீக எண்ணங்கள் மேலோங்கும் கோயில் வழிபாடு தளங்களுக்கு சென்று வருவீர்கள் வெளிநாடு தொடர்புடைய தொழில்கள் நல்ல லாபத்தை தரும்.

இம்மாதம் சூரியன் பலவீனமாக காணப்படுவதால் யாரிடமும் பகைத்துக் கொள்ளாதீர்கள் தந்தை மகன் உறவு கொள் பூசல்கள் வரக்கூடும்.

புதனும் 12-மற்றும் 1ம் இடங்களில் வலம் வருவதால் சோம்பல் அதிகமாக காணப்படும் முடிவுகள் எடுப்பதில் கால தாமதம் ஏற்ப்படும்.
ஒன்பதாம் இடத்தில் ராகு சஞ்சரிப்பதால் வேலை செய்யும் இடத்தில் வேலை பளு அதிகமாக காணப்படும் வேலையில் திருப்தி இருக்காது மேல் அதிகாரியிடம் கெட்ட பெயர் வாங்க நேரிடும் கவனம்.

ராசிக்குள் குரு பகவான் சஞ்சரிப்பதால் வீண் ஆடம்பர செலவுகளை தவிர்ப்பது நன்று கடன் கொடுக்கல், வாங்கல் விவகாரங்களில் தலையிட வேண்டாம்.

ஜூன் 14,15,16 சந்திராஷ்டமம்.

பரிகாரம்!
வாரம் தோறும் வரக்கூடிய புதன்கிழமைகளில் லட்சுமி நரசிம்மர் வழிபாடும் அர்ச்சனையும் செய்து வாருங்கள்.
சோழிங்கர் யோக நரசிம்மர் வழிபாடு சிறப்பைத்தரும் நல்லதே நடக்கும்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE