ஜூன் மாதம் 2025 ராசி பலன்கள் - ரிஷபம்

By செய்திப்பிரிவு

ராசிக்கு 12-மற்றும் 1ம் இடங்களில் சுக்கிரன் சஞ்சரிப்பதால்  மனதில் அமைதியும் சந்தோஷமும் பிறக்கும் பண தேவைகள் பூர்த்தியாகும் கணவன் மனைவி உறவு பலப்படும் புதிய வாகன யோகமும் உண்டாகும்.

தன ஸ்தானமான 2-ம் வீட்டில் குருபகவான் சஞ்சரிப்பதால். தொழில் வியாபாரத்தில் சாதிக்க முடியும் கூட்டு தொழில் லாபத்தை தரும்.திருமண சுப நிகழ்ச்சிகள் நடக்கும். புதிய வேலை வாய்புகள் உருவாகும்.கடன் சுமைகள் குறையும் கொடுத்த பணம் வசூலாகும்.

11ம் வீட்டில் சனிபகவான் சஞ்சரிப்பதால் அரசியல் செல்வாக்கு கூடும். சொத்து பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
10-ம் இடத்தில் ராகு இருப்பதால் விரைய செலவுகள் கட்டுக்குள் வரும் உடல் ஆரோக்கியம் மேம்படும் மருத்துவ விரையங்கள் தவிற்காகப்படும்.அன்னியமொழிகாரர்களின் உதவிகள் கிடைக்கும்.

வெளிநாடு வேலை வாய்புகள் உருவாகும். இம்மாதம் சூரியன் 1-மற்றும் 2ம் இடங்களில் பலவீனமாக காணப்படுவதால் யாரையும் பகைத்துக்கொள்ளாதீர்கள். மனை நிலங்கள் சொத்துக்கள் வாங்கும் பொழுது பத்திர பதிவுகளில் கவனம் செலுத்துங்கள்.

 4-ம் இடத்தில் கேது இருப்பதால் தாயாருக்கு மருத்துவ செலவுகள் உண்டாகும் தாயாருடன் வாக்குவாதங்கள் செய்யாதீர்கள்.
புதனும் இம்மாதம் 1-2 மற்றும் 3ம் வீடுகளில் வலம் வருகிறார் இந்த மூன்று இடங்களும் புதனுக்கு பலவீனமான இடங்களாகும்.
ஞாபகமறதி அதிகமாக காணப்படும் சோம்பல் அதிகரிக்கும்.

செவ்வாய் 7ம் தேதிவரை மட்டுமே 3ம் இடத்தில் பலமாக இருப்பார் பிறகு 4-ம் வீட்டுக்கு செல்வார்
இதனால் முன் கோபம் அதிகமாக காணப்படும் யாரையும் எடுத்தெறிந்து பேசாதீர்கள்.
ஜூன் 12,13,14 சந்திராஷ்டமம்.

பரிகாரம்!
வாரம் தோறும் வரக்கூடிய சனிக்கிழமைகளில் வினாயகர் வழிபாடும் அர்ச்சனையும் செய்து வாருங்கள் சங்கடஹர சதுர்த்தி நாளில் கோயில்களில் பிரசாதம் வழங்கவும் நல்லதே நடக்கும்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE