ஜூன் மாதம் 2025 ராசி பலன்கள் - மேஷம்

By சரவணன்

இம்மாதம் சுக்கிரன் பலம் பெற்று ராசிக்குள் சஞ்சரிப்பதால் தன வரவுகள் நன்றாக இருக்கும் கணவன் மனைவி ஒற்றுமை மேலோங்கும் புதிய வாகன யோகம் உண்டாகும் ஜூன் 29-ம் தேதி இரண்டாம் விதமான தன ஸ்தானத்துக்கு  செல்வதாலும் சுக்கிரன் நன்மைகளை வாரி வழங்குவார்.தொழில் வியாபாரங்கள் செழிப்படையும் லாபம் பன்மடங்கு உயரும்.

11-ம் இடமான லாப ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதால் திடீர் பணவரவுகள் உண்டாகும் பண தேவைகள் பூர்த்தியாகும் நினைத்த காரியம் யாவும் கைகூடும் மருத்துவ விரைய செலவுகள் கட்டுக்குள் வரும் வேலை இழந்தவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் வெளிநாடு யோகம் உண்டு.

மாதம் முற்பாதி வரை சூரியன் 2-ம் இடத்தில் பலவீனமாக தென்பட்டாலும் ஜூன் 15-ம் தேதிக்கு பிறகு 3-ம் இடத்துக்கு செல்கிறார் இதனால் நன்மைகள் பல உண்டாகும் அரசாங்க அனுகூலங்கள் கிடைக்கும் புதிய மனிதர்களின் சந்திப்பு நிகழும் அவர்களால் ஆதாயம் கிடைக்கும் அரசு தேர்வுகளில் வெற்றி பெற முடியும் காரிய தடைகள் விலகும் வழக்குகள் வாபஸ் ஆகும்.
இம்மாதம் புதன் 2 மற்றும் மூன்றாம் இடங்களில் பலவீனமாக காணப்படுவதால் சற்று முன் எச்சரிக்கை தேவை ஜீன் 22-ம் தேதி 4-ம் இடத்துக்கு செல்லும் வரை எச்சரிக்கை மிக அவசியம் இம்மாதம் புதன் ரிஷபம் மிதுனம் கடகம் ஆகிய 3 வீடுகளில் சஞ்சாரம் செய்கிறார் .

2-3ம் வீடுகள் பலவீனமாக இருந்தாலும் 4-ம் வீடு யோகத்தை வழங்கும்.

ராசிக்கு மூன்றாம் இடத்தில் குரு பகவான் சஞ்சரிப்பதால் தொழில்களுக்காக புதிய முதிலீடுகள்  எதையும் போடாதீர்கள் வரக்கூடிய வருமானம் வந்து கொண்டே இருக்கும்.ஆடம்ர செலவுகளை தவிற்க்கவும்.

இம்மாதம் செவ்வாயும் 4 மற்றும் 5-ம் இடங்களில் பலவீனமாக காணப்படுவதால் முன்கோபம் அதிகமாக காணப்படும் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள் சகோதரர்களிடம் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது.

5-ம் இடத்தில் கேது இருப்பதால் பிள்ளைகளுடன் கனிவாக நடந்து கொள்ளுங்கள் ஆன்மீக எண்ணங்கள் மேலோங்கும் கோயில் வழிபாட்டு தலங்களுக்கு சென்று வருவீர்கள்.

பன்னிரண்டாம் இடமான விரய ஸ்தானத்தில் சனி பகவான் இருப்பதால் சுப விரைய செலவுகள் செய்வது நன்று கையில் பணம் இருந்தால் வீடு மனை நிலங்களில் முதலீடு செய்யுங்கள்.

ஜூன் 09,10,11 சந்திராஷ்டமம்.

பரிகாரம்!
வாரம் தோறும் வரக்கூடிய திங்கட்க்கிழமைகளில் நவககிரக சந்திரன் வழிபாடும் திருப்பதி ஏழுமலையான் வழிபாடும் சிறப்பைத்தரும் ..பௌர்ணமி பூஜை செய்வதால் செல்வம் செழிக்கும்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE