மேஷம்
மேஷ ராசி நண்பர்களே, இன்று குடும்பத்தில் மன மகிழ்ச்சி உண்டாகும். இழுபறியாக இருந்த வேலைகள் சீக்கிரத்தில் முடியும். பராமரிப்பு செலவுகள் கூடும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும். உத்யோகத்தில் நற்பெயர் கிடைக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசி நண்பர்களே. இன்று மனதிற்கு சந்தோஷம் தரக்கூடிய விஷயம் ஒன்று நடக்கும். காரிய தடை விலகும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். வியாபாரம் சிறப்படையும்.சந்திராஷ்டமம் நீடிப்பதால் கவனம் தேவை.
மிதுனம்
மிதுன ராசி நண்பர்களே, தேவையற்ற மனபயத்தை நீக்கவும். எதிர்பார்ப்புகள் நாளடைவில் பூர்த்தியாகும். உறவினர்கள் சில உதவியை நாடி வருவர். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும். தொழில் விருத்தி உண்டாகும்.
கடகம்
கடக ராசி நண்பர்களே, இன்று மற்றவர்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். பயணங்களால் அலைச்சல் உண்டாகும். கடன் நெருக்கடிகள் குறையும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். வியாபாரம் செழிப்படையும்.
சிம்மம்
சிம்ம ராசி நண்பர்களே, இன்று புதிய முயற்சிக்கு சாதகமான பலன் கிடைக்கும். பெற்றோரின் அன்பும், ஆசியும் கிடகை்கும். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும் .உத்யோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும். வகனத்தில் செல்லும் பொழுது கவனமும் நிதானமும் அவசியம்.
கன்னி
கன்னி ராசி நண்பர்களே, குடும்ப பொருளாதார நிலை உயரும். பழைய பிரச்னைக்கு நல்ல ஒரு தீர்வு வரும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். உத்யோகத்தில் நன்மை உண்டாகும்.
துலாம்
துலாம் ராசி நண்பர்களே, உறவினர்களால் எதிர்பார்த்த நன்மை உண்டு. பிரியமானவர்கள் சந்திப்பு நிகழும். பயணங்களால் ஆதாயம் உண்டு. உத்யோகத்தில் பாராட்டுகள் கிடைக்கும்.
வியாபாரம் சிறப்படையும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி நண்பர்களே, பல வேலைகளை தனியாளாக நின்று செய்ய முடியும். கணவன் மனைவிக்குள் தேவையில்லாத வாக்கு வாதங்கள் உண்டாகும்.
புது நண்பர்கள் அறிமுகமாவர். காரிய அனுகூலம் உண்டாகும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.
தனுசு
தனுசு ராசி நண்பர்களே, சமுதாயத்தில் நல்ல அந்தஸ்து கிடைக்கும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். பெற்றோர்களின் ஆதரவுக் கிட்டும். தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரியவரும்.
மகரம்
மகர ராசி நண்பர்களே, குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வரும். உடல் நலம் சீராகும். வாழ்க்கைத்துணையின் ஆலோசனை உதவியாக இருக்கும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும்.தொழில் விருத்தி உண்டாகும்.
கும்பம்
கும்ப ராசி நண்பர்களே, இன்று வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். யாரையும் விமர்சித்து பேச வேண்டாம். பண வரவில் தாமதம் இருக்கும். உத்யோக மாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு.
மீனம்
மீன ராசி நண்பர்களே, இன்று திட்டமிட்ட காரியங்கள் தடங்கலின்றி முடியும். தேவையற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் கிடைக்கும். தொழில், வியாபாரம் சிறக்கும்.