கடன் தீர எமகண்ட நேர பரிகாரம்?

By சரவணன்

ஏதோ ஒரு கெட்ட நேரம் கடனை வாங்கி விட்டோம். அந்த கடனை அடைப்பதற்குள் நமக்கு வரும் டென்ஷன், பிரஷர், பாதி வியாதிகளை உடம்பில் உண்டு பண்ணி விடுகிறது. அவ்வளவு கஷ்டமே வேண்டாம். ரொம்ப ரொம்ப ரிலாக்ஸா கூலாக வாங்கிய கடனை திருப்பி அடைக்கலாம். அதற்கு ஒரு வழியை விநாயகர் உங்களுக்கு காண்பித்துக் கொடுப்பார்.
நாளை வெள்ளிக்கிழமையோடு சேர்ந்து வந்திருக்கும் சங்கடஹர சதுர்த்தி. நாளைய தினத்தில் இந்த ஒரு பொருளை உங்கள் தலையை சுற்றி போட்டால், எவ்வளவு பெரிய கடனும் வெகு சீக்கிரத்தில் அடையும் என்பது நம்பிக்கை. அது என்ன பொருள். ஆன்மீகம் சார்ந்த தகவலை இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்வோமா.

கடன் தீர்க்கும் சங்கட சதுர்த்தி பரிகாரம்.

இன்றைய தினம் 16-05-2025  வெள்ளிக்கிழமையோடு சேர்ந்து சங்கடஹர சதுர்த்தி வந்திருக்கிறது. இந்த நாளில் பிள்ளையாரை கும்பிட்டால் உங்கள் கடன் சுமை குறையும். பணம் சம்பந்தப்பட்ட சங்கடத்தை போக்க விநாயகரே ஒரு வழியை காண்பித்துக் கொடுத்தார். நாளைதினம் வெள்ளிக்கிழமை எமகண்ட நேரம் 3 – 4:30 மணி வரை இருக்கிறது.

இந்த இடைப்பட்ட காலத்தில் ஒரு கைப்பிடி கொள்ளு எடுத்துக்கொண்டு, உங்கள் தலையை 9 முறை சுற்றி அந்த கொள்ளு பருப்பை காக்கை குருவிகளுக்கு இரையாக போட வேண்டும். இந்த பரிகாரத்தை விநாயகர் கோவிலில் நின்று செய்வது சிறப்பு. இந்த நேரத்தில் விநாயகர் கோவில் திறந்து இருந்தால், இந்த பரிகாரத்தை நீங்கள் விநாயகர் கோவிலுக்கு உள்ளே செய்யலாம். அரச மரத்தடி பிள்ளையார் இருந்தால் ரொம்ப ரொம்ப சக்தி உள்ளவர்.

அவருக்கு முன்பு நின்று இந்த பரிகாரத்தை செய்து, அந்த மரத்தடியிலேயே இந்த கொள்ளு தூவி விட்டால், உங்களுடைய பெரிய பெரிய கடன் கூட சுலபமாக அடையும். அதேபோல உங்களால் முடிந்தால் சங்கடஹர சதுர்த்தி அன்று 1 கிலோ கொள்ளு வாங்கி விநாயகர் கோவிலில் இருக்கும் அர்ச்சகருக்கு தானமாக கொடுக்கலாம். கடன் சுமையிலிருந்து வெளிவர இந்த பரிகாரமும் உதவியாக இருக்கும்.

மதியம் எமகண்ட நேரத்தில் இந்த பரிகாரத்தை செய்து முடித்துவிட்டு, வெள்ளிக்கிழமை மாலை கோவிலில் நடக்கும் சங்கடஹர சதுர்த்தி பூஜையில் கலந்து கொள்ளுங்கள். பிள்ளையாருக்கு கட்டாயம் சிதறு தேங்காய் உடைக்கவும்.
மீண்டும் கடன் வாங்காமல் இருக்க என்ன செய்வது?

7 கொள்ளு உள்ளங்கைகளில் வைத்துக்கொண்டு, அதோடு கடனுக்காக கொடுக்க வேண்டிய பணத்தையும் வைத்துக்கொண்டு, இனி கடன் வாங்கக் கூடிய சூழ்நிலையை எனக்கு வரக்கூடாது. வருமானம் பெறுக வேண்டும். அதற்கு விநாயர்தான் துணையாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு கையில் இருக்கும் பணத்தை, கடன்காரர்களுக்கு கொடுத்து விடுங்கள். (இந்த ஏழு கொள்ளு பரிகாரத்தை எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் நீங்கள் செய்யலாம். எப்போது கடன்காரர்களுக்கு திருப்பி பணத்தை கொடுத்து கடனை அடைக்கிறீர்களோ அப்போது இந்த பரிகாரத்தை செய்து கொள்ளுங்கள். கடனுக்கு வட்டி கட்டும்போதும் இந்த பரிகாரத்தை செய்யலாம்).

அந்த ஏழு கொள்ளு பருப்பை லேசாக மண் தோண்டி பூமியில் புதைத்து விடுங்கள். இந்த கொள்ளு பரிகாரங்கள் கோடி கடனையும் அடைக்கக் கூடிய வல்லமை கொண்டது. அதேபோல மீண்டும் மீண்டும் கடன் வாங்கக்கூடிய சூழ்நிலைக்கு நீங்க தள்ளப்பட மாட்டீர்கள். உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் நீங்களும் இந்த பரிகாரங்களை பின்பற்றி பலன் பெறவும்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE