பொதுவாக தீட்சை நான்கு வகைகள் மட்டும் தான் உள்ளது என்றும்,
அவைகள்
திருஷ்டி தீட்சை,
ஸ்பரிச தீட்சை,
கிருபா தீட்சை,
சப்த தீட்சை என்பவைங்கள் ஆகும்.
சரி இந்த தீட்சைகளை பற்றி கொஞ்சம் தெளிவாக இந்த பதிவில் பார்க்கலாம்..
(1) திருஷ்டி தீட்சை – பார்வை மூலம் உள்ளத்தில் இருக்கும் அருளை வழங்குதல்.
(2) ஸ்பரிச தீட்சை – ஒரு பழத்தை கொடுத்தோ அல்லது ஒரு விரல் மூலம் தொட்டோ அருள் வழங்குதல்.
(3) கிருபா தீட்சை – தனது சிந்தையால் சீடனிடம் சக்தி வழங்குதல்.
(4) சப்த தீட்சை – ஏதாவது ஒரு மந்திரத்தை சீடனிடம் காதில் ஓதி வழங்குதல்.
இதை விட இன்னொரு வகையான ஒரு தீட்சை முறையும் உள்ளது. இந்த முறை நம் நாட்டில் எத்தனை குருமார்களுக்கு தெரியும் என்பது எனக்கு தெரியாது, இருந்தாலும் அந்த தீட்சையை பற்றியும் இந்த பதிவில் தெரிந்து கொள்வோமா....?
இந்த முறை தீட்சையை தச தீட்சை என்று கூறுவார்கள். அதாவது எட்டும்;ரெண்டும் பத்து.
இதை தான் வட மொழியில் தசம் என்று சொல்வார்கள். சரி அது என்ன எட்டும்;ரெண்டும்.....? வாங்க அந்த எட்டும்;ரெண்டும் என்னவென்று தேடுவோம்.
அகார உகாரத்தில் மகாரம் பிறக்கும், சூரிய சந்திரனோட வெளி சேர அகாரம் பிறக்கும். இடகலை - பிங்கலை இரண்டும் ஒடுங்க சுழுமுனை திறக்கும். இந்த செயலை சுருக்கமாக கூற வேண்டுமென்றால் இதன் பெயர் தான் முப்பு.
அதாவது இந்த முப்பை அண்டம், பிண்டம், நாதம், விந்து, அகரம், உகரம், சூரியன், சந்திரன், மீனம், மேஷம், கோஷம், பீசம், ஆண், பெண், சக்தி, சிவம், கணபதி, சுப்ரமணி, அப்பு, உப்பு, சிற்றண்டம், பேரண்டம், வாசி, சுழிமுனை என்று பல பெயர்களில் சித்தர்கள் பொருள் கொடுத்தாலும் அதன் தத்துவம் ஒன்று தான்.
அந்த ஒரே பொருளில் தான் இரண்டும் கலந்து கட்டுண்டுக்கிடக்கிறது....
அப்படி பட்ட சிவப்பொருளை தான் "அ-காரம்" என்று அழைக்கின்றோம். இதனை அறிய ஒரு மனிதனுக்கு ஞானம் வேண்டுமென்றால்
அந்த ஞானம் கிடைக்க பல ஆண்டுகள் ஆகும்.
அதுவும் ஒரு குரு:வால் தொட்டுகாட்டாத எதுவும் தெளிவாகாது. இந்த உபதேசம் கூட
விட்ட குறை தொட்ட குறை உள்ளவர்களுக்கு மட்டுமே காண கிடைக்கும் என்பது சித்தர்களின் வாக்கு.
பண்டையகாலத்தில் மலைகுன்றுகளில் வாழ்ந்த சித்தர்கள் ஒரு சீடனுக்கு உபதேசம் தரும் முன் அந்த சீடனை 12ஆண்டுகள் தொடர்ந்து சோதித்த பின்னரே ஒவ்வொரு வித்தையாக போதிக்க வேண்டும் என்று சில விதிமுறைகளை வகுத்து வைத்தார்கள்.
அதாவது ஒரு சீடன் தன் குருவுக்கு 12ஆண்டுகள் தொண்டு செய்த பின் தான் குருவின் மனதில் இடம் பிடிக்கின்றான்.
ஆனால் இப்போல்லாம் அப்படி இல்லை. குருவுக்கு எந்த தொண்டும் தேவைப்பட வில்லை... அன்று ஒரு சீடன் செய்யும் அனைத்து தொண்டும் இன்று "பணம்"என்ற ஒற்றை வரியில் வந்து முடங்கிவிட்டது.
காரணம் மனிதனின் நாகரீக வளர்ச்சி அப்படி.
சரி இந்த முப்பை பற்றி சித்தர்கள் அண்டம், கடுக்காய், முட்டையோடு, ஏகமூலி, வல்லாரை, திருநீற்றுப் பச்சிலை, தலைப்பிண்டம், அஸ்தி, குருவண்டு, கருங்குருவி என்றெல்லாம் விவரிக்கப்படும் பொருள். வெறும் பரிபாசைகள் இவையெல்லாம் அனுபவத்தில்
பொருள் வேற வேற இல்லை.
ஆகவே வாதமானாலும் சரி, வைத்தியமானாலும் சரி, ஆதி பொருள் இதுதான் என்று அறியாதவருக்கு எதுவும் முழுமையாகாது. அகாரத்திற்கு அண்டக்கல் முதல் 320பெயர்கள் உண்டு, இப்படிப்பட்ட அகாரத்தை முறைப்படி வேதிக்கும் போது அதில் ரசமும், கந்தகமும், வாயுவும் தனித்தனியாக பிரிந்து கடைசியில் பிருதி எனும் மண் கூறுமட்டும் சாம்பல் போன்று மிஞ்சும்.
ஆக ஆகாரத்திலிருந்து நான்கு பொருட்கள் கிடைக்கின்றன அவைகளை நாம் ஏன் பிரிக்கப்பட வேண்டுமென்றால், ஆகாரத்தில் கட்டுண்ட நிலையில் உள்ள பஞ்ச பூதங்களை பிரித்தால் செயல்படாது, ஒடுங்கும் தன்மைக்குரிய அவைகளின் கட்டவிழ்த்துக்கொள்கின்றது, இதனால் அவைகள் திரும்ப செயல் பட தொடங்கிவிடும்.
ஒடுங்கிய பஞ்ச பூதங்களை செயல்படும் நிலைக்கு கொண்டு வரும் போது அவைகளின் திறன் மிக அற்புதமாக இருக்கும்.
அதாவது நீராக உள்ள பாத ரசத்தை கெட்டியாக்கும், கெட்டியாக உள்ள பாத ரசத்தை சுண்ணாமாக்கும் (சாம்பல் போன்று) மீண்டும் நீராக மாற்றலாம். இப்படி இப்படி அவைகளால் மாற்றப்படாத பொருட்களே கிடையாது.
இப்படி பஞ்ச பூதங்களை வாத முறையில் கையாண்டு அவைகளை பிரித்து "சிவய-நம"
எனும் முறையில் திரும்ப இணைக்க அதில்
இனிப்பு சுவையும், தேன் போன்றும், தெள்ளமுது போன்ற அமிர்தம் கிடைக்கும்.
இதுவே பெருமருந்து. இதனை நீராக, மெழுகாக, குழம்பாக, சுண்ணாமாக பெற சித்தர்கள் வாத முறைகளில் பல வகையில் விளக்கம் கொடுத்துள்ளார்கள்.
இந்த பொருளை உடலில் சேர்ப்பது அமுரி தாரணை, அமிர்த தாரணை, வாசி தாரணை என பல வகைப்படுகிறது.
"வாசியே அமுதமென அறியாது கும்பித்து
மாண்டோர் கோடி "
என்று அகத்தியாரின் சீடராகிய ஒருவர் பாடியுள்ளார்.
இந்த முறையில் வாசி பயற்சி செய்யும் போது
அந்த மனிதனின் சுவாசமாகிய 21,600ம்
அவரது மூல நாடியான குண்டலினி ஆற்றலை தலை உச்சிக்கு கொண்டு வந்து உச்சிக்குழியை திறக்கும், பிறகு உடலில் உள்ள
அண்ணாக்கும், உண்ணாக்கும் இணையும். இதனால் உடலில் உள்ள மண்டலம் திறந்து அமிர்தம் கசிந்து இறங்கும். இந்த நிலையில் நம் சுவாசங்கள் இடகலை, பிங்கலை தானாகவே ஒடுங்கி சுழுமுனை திறக்க கும்பகம் ஏற்பட்டு சாமதி நிலை உருவாகும்.
சமாதி நிலை என்றால் செத்துப்போவது என்று சிலர் தவறாக புரிந்துக்கொண்டுள்ளார்கள் உண்மையில் சமாதி நிலை என்றால் என்ன.?
இந்த சமாதி நிலை என்பது சொரூப சித்திக்குரிய துவக்க நிலை அனுபவம் தான்,
அதாவது அகாரத்தை பக்குவப்படுத்தி பெரும் பொருள்'ளாகிய சிகாரம் முதல் உகாரம், மகாரம், நாகரம், யாகரம், வகாரம் ஆகிவற்றை அடைந்து அதை முறைப்படி உடலில் சேர்ப்பதே தச தீட்சை என்பதாகும். அதாவது பத்து தீட்சை.
இந்த நிலையை ஒரு சாதாரண மனிதன் அடைய வேண்டும்'மென்றால் 10 முதல் 25 ஆண்டுகள் வரை ஆகலாம் சிலருக்கு இன்னும் அதிக ஆண்டுகளும் பிடிக்கலாம்.
இப்படி பெற பட்ட முப்பு குரு பாத ரசத்தை சுத்தம் செய்து நெருப்புக்கு ஓடாதவாறு மணியாக கட்டலாம். இப்படி கட்டும் ரசமணி உயர்ந்த உலோகப்பொருளாக மாறுகின்றது.
முப்புகுருவின் சரியான சித்தி முறையாகும்,
அதாவது அகார பொருளால் கட்டப்படும் பாதரச மணிக்கு சிறப்பு குணங்கள் உண்டு.
"அ"-காரப் பொருளில் கட்டப்படும் பாத ரசமணிக்கு சிறப்பு குணங்கள் இருக்குமென்று கூறியிருந்தேன். அந்த மணியை நம் உள்ளங்கையில் வைத்து மூடிக்கொண்டால்
நம் உடலில் உள்ள மூலாதார சக்கரம் முழுமையாக இயங்க தொடங்கும், இந்த மணியை வைத்திருப்பவரிடம் ஒரு பெரிய மாற்றங்கள் ஏற்படும், அதாவது உடலின் சுழுமுனை மேலெழும்பத் துவங்கி உடல் முழுவதிலும் மின் அதிர்வாற்றல் பெருகுவதை உணர முடியும். மணியை கையிலிருந்து எடுத்த பிறகும் சிறிது நேரம் அந்த மின்சார அதிர்வலைகள் நம் உடலில் இருக்கும்.
இதில் இன்னொரு வகை மணியும் உண்டு.
அதற்கு, "ககனமணி" என்று பெயர்.
இந்த வகை மணியானதை வாயில் போட்டுக்கொண்டால் உடலி'லிருந்து உயிரைப் பிரித்து மேலே தூக்கும்.
கற்ப முறையில் பயற்சி செய்து தச தீட்சை முடித்தவருக்கு இதே மணி அவரது உடலையும், உயிரையும் சேர்த்துத்தே தூக்கும், புவி ஈர்ப்பு விசைக்கு எதிராக நம் உடலை மேலே எழுப்பும் ஆற்றல் இந்த மணிக்கு உண்டு. இந்த மணியை சாதாரண மனிதன் வாயில் போட்டால் அவர்கள் உடலை விட்டு உயிரை மட்டும் மேலே தூக்கும். இது பாத ரசமணியின் இயல்பு குணம். யாரும் இந்த மாதரி முறையை தகுந்த பயற்சி இல்லாமல் எந்த பாதரசமணியை வாயில் போடாதீர்கள். தகுந்த பயற்சி இல்லாதவர்களுக்கு அது ஒரு தற்கொலைக்கு சமம் என்பதை நினைவில் கொள்க.
நண்பர்களே தற்போது சிலரால் விற்கப்படும் மணிகள் எதற்கும் உதவாதது. முப்பு குரு'வால் அல்லது அமுரியால் கட்டப்பட்ட மணியே அதற்க்கு சக்தி தரும். பாதரசம் என்பது வெறும் உடல் மட்டுமே அதோடு முப்பு அல்லது அமுரி சேராமல் ஒரு மணி செய்தால் அதில் எந்த பயனுமில்லை.
உடல் தனித்து இயங்க சக்தி அற்றது அகாரமே அதற்கு உயிராகும். உடலும் உயிரும் இணைந்தால் தான் இயக்கம் ஏற்ப்படும். பாத ரசத்தில் எளிய முறையில் மணி செய்ய முடியும் ஆனால் அதன் மூலம் எந்த சக்தியும் பெற முடியாது. இந்த வகை மணிகள் விஷத்தன்மையும் குளிர்ச்சியும் சேர்ந்து உடலில் (தோலில் கருப்பு தழும்புகளை) உருவாக்கிவிடும். ஆகவே இது மனிதர்கள் அணிய தகுதியற்ற மணிகள் என்பதை அறிந்துகொள்ள வேண்டும். ரசவாதத்தில் பாத ரசத்தை சுத்தம் செய்யாமல் செய்யப்படும் மணிகளை அணிவது உடலில் பல வகையில் பயன்படுத்துவது உடல் நலத்திற்கு கேடுகளை மட்டுமே தரும். எனவே தச தீட்சைப் பெற்று
அமுரியை அறிந்த ஒருவர் மட்டுமே 64வகை பாஷாணங்களை சிறப்பாக கட்டி அதற்கு உயிர் கொடுக்க முடியும்.
சரி பொதுவாக தீட்சை
அப்படியென்றால் என்ன.....?
தீட்சை ஆதார தீட்சை, நிராதார தீட்சை என இருவகைப்படும். இறைவன் ஞானாசிரியர் ஒருவர் மூலம் ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களையும் உடைய நம்போன்ற சகலருக்கும் அளிக்கும் தீட்சை ஆதார தீட்சை எனப்படும்.
இறைவன் வேறோர் ஆதாரத்தையும் வேண்டாது தானே குருவாய் நின்று ஆணவம், கன்மம் ஆகிய இரு மலங்கள் மட்டும் உடைய பிரளயாகலருக்கு முத்தியளிக்கும் தீட்சை நிராதார தீட்சை ஆகும்.
தீட்சை அளிக்கப்படும் முறைக்கேற்ப ஆதார தீட்சையானது நயனம், பரிசம், வாசகம், மானசம், சாத்திரம், யோகம், ஒளத்திரி என ஏழுவகைப்படும்.
நயன தீட்சை:-
குரு தன்னை சிவமாகப் பாவித்து அப்பாவனையுடன் மாணாக்கனைக் கண்ணால் நோக்கி அவன் செய்த கருமங்களை அழித்தொழிப்பது நயன தீட்சை ஆகும். சிவபெருமானிடம் திருத்தோணிபுரத்திலே திருஞானசம்பந்தர் பெற்றது நயன தீட்சையாகும்.
பரிச தீட்சை:-
குரு தன் வலது கையை சிவனுடைய கையாகப் பாவித்து மாணக்கனது தலையில் வைத்து அவனைச் சிவமாகச் செய்தல் பரிச தீட்சையாகும். சுந்தரமூர்த்தி நாயனாருக்கு சிவபெருமான் திருவெண்ணெய் நல்லூரில் வழங்கிய தீட்சை பரிச தீட்சை அகும்.
வாசக தீட்சை:-
குரு மந்திரங்களைச் சந்தர்ப்பத்திற்கேற்றவாறும், பொருந்துமாறும், மாணவனுக்கு உபதேசிப்பது வாசக தீட்சை ஆகும். மாணிக்கவாசகருக்கு சிவபெருமான் திருப்பெருந்துறையில் குருந்தமர நிழலில் உபதேசித்தமை வாசக தீட்சையாகும்.
மானச தீட்சை:-
குரு தன்னைச் சிவமாகப் பாவித்து அந்தப் பாவனையுடன் மாணாக்கனது ஆன்மாவை உடலினின்றும் பாவனையில் கொண்டு வந்து தனது ஆன்மாவிற் சேர்த்துச் சிவமானதாகப் பாவித்து மீள அவ்வான்மாவை அவனது உடலிற் சேர்த்தல் மானச தீட்சை ஆகும்.
சாத்திர தீட்சை:-
குரு மாணவனுக்குச் சிவாகமங்களையும் திருமுறைகளையும் ஓதுவித்தல் சாத்திர தீட்சையாகும். மாணிக்கவாசகருக்கு சிவபெருமான் திருப்பெருந்துறையில் வைத்து பதி, பசு, பாச விளக்கம் வழங்கியமை இதற்கு உதாரணமாகும்.
யோக தீட்சை:-
குரு மாணக்களை சிவயோகம் பயிலச் செய்தல் யோக தீட்சையாகும். தட்சணாமூர்த்தியாகிய சிவபெருமான் சனகர், சனாதனர், சனந்தனர், சனத்குமாராகிய நான்கு பேருக்கும் மெய்மை புரிய வைத்தமை யோக தீட்சையாகும்.
ஒளத்திரி தீட்சை:-
பொதுவாகச் சைவ மக்களுக்குச் செய்யப்படுவது ஒளத்திரி தீட்சையாகும். ஆன்மாக்களாகிய உயிர்களை வீடுபேற்றை அமையும் பொருட்டு ஆசாரியரால் அக்கினி காரியத்துடன் செய்யும் அங்கி தீட்சையே ஒளத்திரி தீட்சை ஆகும்.
இது ஞானவதி, கிரியாவதி எனும் இருவகைகளில் ஒருவகையாற் செய்யப்படல் வேண்டும் எனச் சிவாகமங்கள் கூறுகின்றன.
- சித்தர்களின் குரல்.