மே 2025 - ரிஷபம் ராசி பலன்கள்

By செய்திப்பிரிவு

ரிஷப ராசி நண்பர்களே மேமாதம் நடைபெறக்கூடிய குரு மற்றும் ராகு+கேது பெயர்ச்சியில் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கும் என்பதை காண்போம்.

மே 14ம் தேதி.நடைபெறக்கூடிய குருபெயர்ச்சியில் ராசிக்குள் ஜென்மத்தில் இருந்த குருபகவான்.பல குழப்பங்களை தந்திருப்பார் குருபெயர்ச்சியில் 2-ம் இடமான தனஸ்தானத்துக்கு வருகிறார் குருபகவான் 2,5,7,9,11 ம் இடங்களில் அமரும் பொழுது குருபலன் என ஜோதிட சாஸ்த்திரத்தில் கூறப்படுகிறது .

அவ்வகையில் இந்த குருபெயர்ச்சி மகத்தான நன்மைகளை வழங்கும் என்பதில் ஐய்யமில்லை.
தடைபட்ட திருமணங்கள் நடக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்கும் தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும் கணவன் மனைவிக்குள் ஒற்றுமை நிலவும்.

பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவார்கள் தைரிமும் தன்னம்பிக்கையும் பிறக்கும்.கடன் இருந்தால் சிறுக சிறுக அடைக்க முடியும்.சகோதர வழியில் ஆதாயம் அடைவீர்கள். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் பெறுவீர்கள்.

ராகு+கேது பெயர்ச்சியில் ராகு 11ம் இடத்தில் இடத்தில் இருந்து 10ம் இடத்துக்கு பின்னோக்கி செல்கிறார் 10-ம் இடம் என்பதும் ராகுவுக்கு சிறந்த இடமாக கருதப்படுகிறது இதனால் புதிய தொழில்கள் மூலமாக நல்ல லாபம் பெறுவீர்கள் .மருத்துவ விரைய செலவுகள் குறையும் வெளிநாடுகளில் வேலை வாய்புகள் தேடிவரும் கல்வி பயில வெளிநாடு செல்லும் யோகமும் உண்டு.அன்னிய மொழி நண்பர்களால் ஆதாயம் பெறுவீர்கள் வேலை இழந்தவர்களுக்கு புதிய வேலை வாய்புகள் உருவாகும்.

5-ம் வீட்டில் இருந்த கேது 4-ம் இடத்துக்கு பின்னோக்கி செல்வதால் தாயாரின் உடல்நலத்தில் சிறு பிரச்சனைகள் வரக்கூடும் வீண் விவாதங்களை தவிற்க்கவும்.சொத்துக்கள் வாங்கும் பொழுது பத்திர பதிவுகளில் கவனம் செலுத்துங்கள் .பெரிய மனிதர்களிடம் பகையை வளர்த்துக்கொள்ளாதீர்கள்.

சோம்பல் அதிகமாக காணப்படும் வேலைக்கு செல்ல மனம் இருக்காது.வெளியூர் பயணங்களால் வீண் விரைய செலவுகள் உண்டாகும்.

பரிகாரம்!
வாரம் தோறும் வரக்கூடாய சனிக்கிழமைகளில் வினாயகர் வழிபாடும் வாயு புத்திரன் ஹனுமனுக்கு அர்ச்சனையும் செய்து இயலாதவர்களுக்கு உணவு வழங்கி வாருங்கள் நல்லதே நடக்கும்.

 

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE