இன்றைய ராசி பலன்கள் - (11-04-2025 வெள்ளிக் கிழமை)

By செய்திப்பிரிவு

மேஷம்
மேஷ ராசி நண்ர்களே, மனதில் அமைதி பிறக்கும்.குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கும். அடுத்தவர் தவறுகளை சுட்டி காட்ட வேண்டாம். காரிய அனுகூலம் உண்டாகும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.தொழில் வியாபாரத்தில் புதிய முதலீடுகள் மூலமாக லாபம் அதிகரிக்கும்.

ரிஷபம்
ரிஷப ராசி நண்பர்களே, உங்களால் மற்றவர்கள் பயனடைவர். புதிய நட்பு மலரும் பண வரவு நன்றாக இருக்கும்.மனதில் புது உற்சாகம் பிறக்கும். அத்தியாவசிய தேவைகள் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

மிதுனம்
மிதுன ராசி நண்பர்களே, குடும்பத்தில் முக்கிய பணிகள் முடிவடையும். பண வரவில் தாமதம் இருக்கும். தேவையின்றி கடன் வாங்காதீர்கள்.புது நபர்களை நம்பி எதிலும் ஏமாற வேண்டாம். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

கடகம்
கடக ராசி நண்பர்களே, எதிர்ப்புகளைச் சமாளித்து வெற்றிநடை போட முடியும். பொருளாதார நிலை சீராக இருக்கும்.கணவன் மனைவி உறவு பலப்படும். பயணங்களால் ஆதாயம் உண்டு. தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.

சிம்மம்
சிம்ம ராசி நண்பர்களே, குடும்பத்தில் சிக்கனத்தை கடைபிடிக்கவும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். உத்யோகத்தில் வேலைப்பளு கூடும்.வெளியூர் பயணங்களால் ஆதாயம் பெறுவீர்கள்.

கன்னி
கன்னி ராசி நண்பர்களே, இழுபறியாக இருந்த வேலைகள் சீக்கிரத்தில் முடியும். உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். கணவன் மனைவிக்குள் தேவையற்ற விவாதங்களை தவிற்க்கவும்.எதிர்ப்புகள் அடங்கும். உத்யோக மாற்றம் ஏற்படும்.

துலாம்
துலாம் ராசி நண்பர்களே, பகைவர்கள் விலகி நிற்பர். ஒவ்வாத உணவு வகைகளை எடுத்துக்கொள் வேண்டாம்.உடல் உஷ்ணம் உண்டாகும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசி நண்பர்களே, பெற்றோர்களின் ஆலோசனை நம்பிக்கை தரும். வெளி நபர் யாரையும் பகைத்துக் கொள்ளவேண்டாம். அனாவசிய பேச்சுக்களை தவிர்க்கவும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.

தனுசு
தனுசு ராசி நண்பர்களே, குடும்ப வாழ்வு மேன்மையடையும். பிராத்தனைகள் நிறைவேறும். திடீர் மருத்துவ செலவுகள் வரும்.பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும்.

மகரம்
மகர ராசி நண்பர்களே, குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். மன வலிமை கூடும். முக்கிய பிரமுகர்கள் அறிமுகமாவர்.திடீர் பண வரவுகளால் நினைத்த காரியம் நடக்கும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும்.

கும்பம்
கும்ப ராசி நண்ர்களே, எதிர்பார்ப்புகள் சீக்கிரத்தில் நிறைவேறும். புதியவரின் நட்பால் உற்சாகம் ஏற்படும். உடல் உபாதைகள் நீங்கும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெறும்.சந்திராஷ்டமம் இருப்பதால் கவனம் தேவை.

மீனம்
மீன ராசி நண்ர்களே, குடும்பத்தின் மேல் பற்று அதிகமாகும். பெரியோர்கள் வார்த்தைக்கு மதிப்பு கொடுக்கவும். வரவுக்குமேல் செலவுகள் உண்டாகும்.வீண் அலைச்சல் ஏற்படும்.உடல் நலனில் கவனம் செலுத்துங்கள். தொழில், வியாபாரம் சிறக்கும்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE