எலுமிச்சம் பழ பரிகாரம் ஏன்?

By செய்திப்பிரிவு

ராஜகனி என்று கூறக்கூடிய பழம் தான் எலுமிச்சம் பழம். எலுமிச்சம் பழத்திற்கு அதிகப்படியான ஈர்ப்பு சக்தி என்பது இருக்கிறது. இது தெய்வீக சக்தி நிறைந்த பழமாகவும் கருதப்படுகிறது. இந்த பழத்தை பயன்படுத்தி பலவிதமான தெய்வங்களையும் நாம் வழிபாடு செய்கிறோம். அதே சமயம் நம்மிடம் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றலை நீக்கக்கூடிய பழமாகவும் இந்த பழம் திகழ்கிறது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த பழத்தை வைத்து நம்முடைய கடன் பிரச்சினையை தீர்ப்பதற்குரிய பரிகாரத்தையும் வழிபாட்டு முறையையும் பற்றி தெரிந்து கொள்வோம்.

முதலில் புள்ளிகள் இல்லாத மஞ்சள் நிறத்தில் இருக்கக்கூடிய ஒரு எலுமிச்சம் பழத்தை யார் கடன்பட்டு இருக்கிறார்களோ யார் கடனால் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்களோ அவர்களே கடைக்கு சென்று வாங்க வேண்டும். வாங்கி வந்த எலுமிச்சம் பழத்தை ஒரு டம்ளரில் போட்டு அந்த எலுமிச்சம் பழம் மூழ்கும் அளவு பன்னீரை ஊற்ற வேண்டும். குறைந்தது 2 மணி நேரமாவது பன்னீருக்குள் எலுமிச்சம் பழம் இருக்க வேண்டும். இது எலுமிச்சம் பழத்தை சுத்தி செய்வதற்குரிய வழிமுறையாகும். பிறகு இந்த எலுமிச்சம் பழத்தை எடுத்து கையில் வைத்துக்கொண்டு ஒரு வெள்ளை நிற பேப்பரில் யாருக்கு எவ்வளவு கடன் தர வேண்டும் என்பதை உங்கள் கைப்பட எழுத வேண்டும்.

பிறகு ஒரு மஞ்சள் நிற துணியில் இந்த எலுமிச்சம் பழம் மற்றும் அந்த பேப்பரை ஒரு மூட்டையாக கட்டி வைத்திருங்கள். இரவு படுக்கச் செல்லும் பொழுது உங்களுடைய தலையணைக்கு பக்கத்தில் இதை வைக்க வேண்டும். இப்படி தொடர்ச்சியாக மூன்று நாட்கள் இரவு படுக்கச் செல்லும் பொழுது உங்கள் தலையணைக்கு பக்கத்தில் வைத்து விட வேண்டும். மூன்று நாட்கள் முடிந்து நான்காவது நாள் காலையில் இதை எடுத்துக் கொண்டு போய் ஓடுகின்ற தண்ணீரில் முழு மனதோடு கடன் பிரச்சினை முற்றிலும் தீர வேண்டும் என்று கூறி போட்டு விட வேண்டும். ஒருவேளை அருகில் எந்தவித நீர் நிலைகளும் இல்லை என்றால் பெரிய மரங்களின் அடிப்பகுதியில் சிறிதளவு பள்ளத்தை நோண்டி இதை புதைத்து விட வேண்டும். கால் படும் இடத்தில் புதைக்க கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.

பிறகு ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும் அருகில் இருக்கக்கூடிய துர்க்கை அம்மன் ஆலயத்திற்கு செல்ல வேண்டும். அவ்வாறு செல்லும் பொழுது கடன் பிரச்சினை தீர வேண்டும் என்ற ஒரே மனதுடன் 51 எண்ணிக்கையில் எலுமிச்சம் பழங்களை வாங்கி மாலையாக கோர்த்து அம்மனுக்கு சாற்ற வேண்டும். அதேபோல் 9 எலுமிச்சம் பழங்களை வாங்கி அதை இரண்டாக நறுக்கி 18 எலுமிச்சம்பழம் தீபங்களை போட வேண்டும். இந்த தீபத்தை போடுவதற்கு நெய்யை பயன்படுத்துவது என்பது மிகவும் சிறப்பு.

இப்படி தொடர்ச்சியாக ஒன்பது வாரங்கள் நாம் துர்க்கை அம்மனை இந்த முறையில் வழிபாடு செய்தோம் என்றால் நமக்கு இருக்கக்கூடிய கர்ம வினைகள் நீங்கி, அதனால் நம்முடைய கடன் பிரச்சனையும் நீங்கும். மேலும் பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

பல தெய்வீக சக்தி மிகுந்த எலுமிச்சம் பழத்தை இந்த முறையில் பரிகாரம் செய்வதோடு வழிபாட்டிற்கும் பயன்படுத்தினோம் என்றால் கண்டிப்பான முறையில் நம்முடைய கடன் பிரச்சனை தீர்வதற்குரிய பொருளாதார முன்னேற்றம் உண்டாகும்..

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE