இன்றைய ராசி பலன்கள் - (07-03-2025 வெள்ளி கிழமை)

By செய்திப்பிரிவு

மேஷம்
மேஷ ராசி நண்பர்களே,காரிய தடைகள் விலகும். குடும்பத்தில் மன நிம்மதி உண்டு. எதிர்பார்ப்புகள் அதிகமாகும். பிரியமானவர்கள் வழியில் ஆதாயம் கிடைக்கும்.கணவன் மனைவி உறவு பலப்படும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.

ரிஷபம்
ரிஷப ராசி நண்பர்களே, மனம் தெளிவு பெறும். நினைத்த காரியம் நடக்கும் .பெற்றோர்களின் நலனில் அக்கறைகொள்ளவும். வம்பு, வழக்குகளில் ஈடுபட வேண்டாம். உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும்.
வெளியூர் பயணங்கள் மேற்கொள்வீர்கள்.

மிதுனம்
மிதுன ராசி நண்பர்களே, குடும்ப சுமையை ஏற்க வேண்டிவரும். விரும்பிய பொருட்களை வாங்க முடியும். உடல் நலனில் கவனம் தேவை.மருத்துவ செலவுகள் வரும். தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும்.

கடகம்
கடக ராசி நண்பர்களே, வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். உறவினர்களிடம் கருத்து மோதல்கள் வரும். பண விவகாரங்களில் கவனம் தேவை.அலைச்சல், டென்ஷன் வெகுவாக குறையும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.

சிம்மம்
சிம்ம ராசி நண்பர்களே, புது உற்சாகம் பிறக்கும் தைரிமும் தன்னம்பிக்கையும் கூடும்.குடும்ப கௌரவம் உயரும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். காரிய அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரியவரும்.

கன்னி
கன்னி ராசி நண்பர்களே, உங்களை சுற்றி இருப்பவர்களின் ஆதரவு பெருகும். யாரிடமும் உணர்ச்சி வசப்பட்டு பேச வேண்டாம். முன் கோபத்தை கட்டுப்படுத்தவும்.தேக பலம் கூடும்.மருத்துவ சிலவுகள் குறையும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெறும்.

துலாம்
துலாம் ராசி நண்பர்களே, புதியவரின் நட்பு உற்சாகம் தரும். ஞாபக மறதி தொல்லை இருக்கும். கடன் தொல்லைகள் ஓரளவு தீரும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.தொழில் வியாபாரங்கள் லாபத்தை தரும்.இன்று இரவு வரை சந்திராஷ்டமம் நீடிக்கிறது கவனம்.

விருச்சிகம்
விருச்சிக ராசி நண்பர்களே, குடும்பத்தில் உங்கள் புகழ் ஓங்கும். பகைகள் மறையும் நட்பு மலரும்.சொன்ன சொல்லை காப்பாற்ற முடியும். கணவன் மனைவிடையே பனிப்போர் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.

தனுசு
தனுசு ராசி நண்பர்களே, திட்டமிட்ட காரியம் தாமதம் இல்லாமல் முடியும். பெற்றோரிடம் பற்று அதிகரிக்கும்.மனக்குழப்பம் காணப்படும் .பண விவகாரங்களில் கவனம் தேவை. யாரையும் விமர்சித்து பேச வேண்டாம். தொழில், வியாபாரம் விருத்தியடையும்

மகரம்
மகர ராசி நண்பர்களே,முன் கோபத்தை தவிற்க்கவும். குடும்பத்தில் வாக்குவாதங்களை தவிர்க்கவும். கொடுக்கல், வாங்கலில் விழிப்புணர்வு தேவை. கோர்ட் வழக்கில் இழுபறி நிலை நீடிக்கும். உத்யோக மாற்றம் ஏற்படும்.தொழில் வியாபாரத்தில் மந்தநிலை நீடிக்கும்.

கும்பம்
கும்ப ராசி நண்பர்களே, குடும்ப விஷயங்களை யாரிடமும் பேசாமல் இருப்பது நல்லது.கணவன் மனைவிக்குள் புரிதல் இருக்கும். பெற்றோரிடம் பற்று அதிகரிக்கும். மனபாரம் குறையும். உத்யோகத்தில் பொறுப்புகள் கூடும்.தொழில் வியாபாரங்கள் சிறப்படையும்.

மீனம்
மீன ராசி நண்பர்களே, அடுத்தவர்களின் தவறாக சுட்டிக்காட்ட விரும்புவீர்கள். வெளிப்படையாக பேசுவதை தவிர்க்கவும். தேவையற்ற பிரச்சனைகளில் சிக்கிக்கொள்ள நேரும்.கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். தொழில், வியாபாரம் சீராக இருக்கும்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE