சனி பெயர்ச்சியில் உச்சம் தொடும் ராசிகள்? (மார்ச் 29ல்)

By செய்திப்பிரிவு

2025 ஆம் ஆண்டில் சனிப்பெயர்ச்சியானது 2025 மார்ச் 29 ஆம் தேதி நடைபெறவுள்ளது. சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இது இந்த ஆண்டின் மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது. தற்போது கும்ப ராசியில் இருக்கும் சனி பகவான் மீன ராசியில் பெயர்ச்சி அகவுள்ளார். சனி பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும்

சனி பகவான் தற்போது அஸ்தமன நிலையில் உள்ளார். சனி பெயர்ச்சிக்கு பிறகு சனி பகவான் ஏப்ரல் மாதம் உதயமாவார். தற்போது மீன ராசியில் பெயர்ச்சி ஆகவுள்ள சனி பகவான் அந்த ராசியிலேயே உதயமாவார்.

சனி பெயர்ச்சிக்கு பின் நிகழவுள்ள சனி உதயத்தின் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிக நன்மைகள் ஏற்படும்.  சனி உதயத்தின் தாக்கத்தால் சனி பகவானின் முழுமையான ஆசிகள் கிடைக்கும். பெற்றோரின் ஆசீர்வாதம் கிடைக்கும். தொழில் தொடர்ந்து முன்னேறும். பலர் தங்கள் வேலையை விட்டுவிட்டு சொந்தமாகத் தொழில் தொடங்கலாம். வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும்.

ரிஷப ராசி

ரிஷப ராசிக்கு 11 இல் லாபத்தில் சனி பகவான் வருகிறார். ரிஷபத்துக்கு சுக்கிரன் அதிபதியாக உள்ளார். சுக்கிரனும், குருபகவானும் நட்பு கிரகங்கள். கஞ்சனூர் சுக்கிரன் ஸ்தலத்துக்குச் சென்று வருவது உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை தரும்.

பெற்றோர், ரத்த பந்த உறவுகளின் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். பெற்றோர் பெரியோரிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. மொத்தத்தில் அவர்களை உள்ளங்கையில் வைத்து தாங்குவது உங்களுக்கு நல்ல பலன்களைத் தரும்.

மிதுனம் ராசி

மிதுன ராசிக்காரர்களுக்கு சனி பெயர்ச்சியும் அதன் பின் வரும் சனி உதயமும் அதிக அளவில் நன்மை பயக்கும். நிதி நிலை முன்னேறும்.

பிரச்சனைகள் முடிவுக்கு வரும். பழைய முதலீட்டிலிருந்து திடீரென்று நிதி லாபம் கிடைக்கக்கூடும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.

மகரம் ராசி

சனி பெயர்ச்சிக்கு பிறகு வரும் சனி பகவானின் உதயத்தால், மகர ராசிக்காரர்கள் ஏழரை சனியிலிருந்து நிவாரணம் பெறுவார்கள். இதன் காரணமாக மிகப்பெரிய அதிர்ஷ்டம் இவர்களுக்கு கிடைக்கும்.

செய்யும் அனைத்து பணிகளிலும் வெற்றி கிடைக்கும். பணியிடத்தில் மேல் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு இனிமையாக இருக்கும்.

சனி பகவானின் பரிபூரண அருள் பெற

நீதி தேவரனான சனி பகவானின் பரிபூரண அருள் பெற, 'நீலாஞ்ஜன ஸமாபாஸம், ரவிபுத்ரம் யமாக்ரஜம்; ச்சாயா மார்த்தாண்ட ஸம்பூதம், தம் நமாமி சனைச்சரம்' என்ற ஸ்லோகத்தை பாராயணம் செய்யலாம்.

நீதி தேவரனான சனி பகவானின் பரிபூரண அருள் பெற, 'நீலாஞ்ஜன ஸமாபாஸம், ரவிபுத்ரம் யமாக்ரஜம்; ச்சாயா மார்த்தாண்ட ஸம்பூதம், தம் நமாமி சனைச்சரம்' என்ற ஸ்லோகத்தை பாராயணம் செய்யலாம்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE