சனிப் பெயர்ச்சி - மிதுனம் ராசி பலன்கள் ( திருக்கணிதப்படி 29.3.25 முதல்)

By செய்திப்பிரிவு

ஆக வரும் மார்ச் மாதம் 29ஆம் தேதி 2025 அன்று சனி பகவான் பெயர்ச்சி ஆகிறார். கும்பம் ராசி இருந்து மீனம் ராசிக்கு செல்கிறார் ஆக இது உங்கள் மிதுனம் ராசிக்கு பத்தாம் பாவமாக வருகிறது அதாவது தொழில் மற்றும் வேலை வாய்ப்பு மற்றும் நாம் செய்யும் செயல்கள் கர்மா எனப்படும் இந்த இடத்திற்கு சனி பகவான் வருவதால் இந்த இடத்தை தூய்மைப்படுத்துவார் அதாவது வேலை தொழில் இவர்களில் பல சிக்கல்களை கொடுத்து நன்மைகளை செய்வார் ஏனெனில் சனி பகவான் ஐந்தாம் பாவத்தில் உச்சம் பெறக்கூடியவர் மிதுனம் ராசிக்கு 7 மற்றும் 8 உடையவர் ஏழாம் பாகம் என்பது நண்பர்கள் கூட்டாக தொழில் புரிவோர் மற்றும் வாழ்க்கை துணை இவைகளை கொஞ்சம் எட்டு என்பது எதிர்பாராத சம்பவங்களை குறிக்கும் ஆக இந்த இரண்டுமே செயல்களாக நடக்கும் உங்களுக்கு அதாவது தொழில் வியாபாரம் அல்லது வேலை இவைகளில் புதிய அனுபவத்தை பெற போகிறீர்கள் புதிய அனுபவத்தை பெறும் போது சில சிரமங்கள் இருக்கத்தான் செய்யும் கவனமாக கையாள வேண்டும் மற்றபடி சனி பெயர்ச்சி பெரிய அளவில் பாதிப்பு எதையும் கொடுக்காது கருமஸ்தானம் எனப்படுவதால் உங்கள் வீட்டில் வயதானவர்கள் இருந்தால் அவர்களுக்கு கர்மம் செய்யக் கூடிய நிலை ஏற்படும் அது ஒன்றும் தவறில்லை .

குரு பெயர்ச்சி  

வரும் மே மாதத்தில் குரு பகவான் பெயர்ச்சி ஆகிறார். இவர் உங்கள் மிதுனம் ராசிக்கு இதுநாள் வரை 12 ஆம் பாவத்தில் இருந்தார் ஆக கூட்டுத்தொழில் வெளிவட்டார பழக்க வழக்கங்கள் நண்பர்கள் இவை அனைத்துமே கொஞ்சம் விரயம் இருக்கத்தான் செய்தது விரயத்தை கொடுத்து புதிய அனுபவங்களை கற்றுக் கொடுத்தால் குரு பகவான் தற்போது ஜென்ம குருவாக வருகிறார் அதாவது உங்கள் ராசியில் இருக்கப் போகிறார் அதனால் உடல் நேரத்தில் கொஞ்சம் கவனம் தேவை கௌரவம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் கொஞ்சம் வரக்கூடும் மற்றபடி கூட்டி தொழில் நண்பர்கள் வாழ்க்கை துணை வாரிசுகள் உங்கள் கௌரவம் அந்தஸ்து இவைகள் எல்லாம் சிறப்பாக இருக்கும் ஏனெனில் குருவின் பார்வை பல சிறப்புகளை கொடுக்கும் மேலும்

ராகு கேது பெயர்ச்சி

அதாவது உங்களது மிதுன ராசிக்கு நான்காம் பாவத்தில் இதுவரை இருந்து வந்த கேது பகவான் பல சிரமங்களையும் உடல் நல சிரமம் ஒரு சுகபோக வாழ்க்கை இல்லாத ஒரு நிலை சொந்த பந்தங்கள் உடைய கருத்து வேறுபாடு தாயாரின் உடல்நலம் இவைகளில் பல பிரச்சினைகள் கொடுத்து இருப்பார் அவை எல்லாம் சரியாகி தற்போது நல்ல பலன்கள் நடக்க ஆரம்பிக்கும் கேதுவால் மேலும் ராகு உங்கள் வாசித்து பத்தாம் பாவத்தில் இதுவரை இருந்து தொழில் மற்றும் வேலையை இவற்றில் ஒரு தெளிவில்லாத ஒரு நிலையை கொடுத்துக் கொண்டிருக்கிறார் தற்போது அந்த நிலை மாறும் தொழில் வேலை வாய்ப்பு சிறப்பாக நடைபெற்றது ஒன்பதாம் பாவத்திற்காக என்பதா குலதெய்வ வழிபாடு அதற்கான நேரம் காலம் கூடி வரும் உங்களது புகழ் செல்வாக்கு அதிகரிக்கும் ஆனால் அந்த நேரத்தில் தான் கொஞ்சம் கவனம் தேவை மொத்தத்தில் உங்களது ஜாதகத்தில் சிறப்பான தசாபுத்தி நடைபெற்றுக் கொண்டிருந்தால் பெரிய பாதிப்பு எதுவும் இருக்காது பல நன்மைகள் நடைபெறும்

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE