கடன் பிரச்சனை தீர்க்கும் பரிகாரங்கள்?

By செய்திப்பிரிவு

01. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் காலை குளித்து பூஜைகள் செய்து அருகில் உள்ள மளிகை கடைக்கு சென்று மகாலெட்சுமியை வேண்டிக்கொண்டு கல் உப்பு வாங்கிவந்து உப்பு பாத்திரத்தில் போடவும்.இதை ஒவ்வொரு வாரமும் செய்து வர வீட்டில் மகாலெட்சுமி வாசம் நிரந்தரமாகும்

02. வெள்ளிக்கிழமை காலை 5 வெற்றிலை 5 கொட்டை பாக்கு 5 ஒரு ரூபாய் நாணயங்கள் அனைத்தும் பூஜையில் வைத்து லட்சுமி வழிபாடு செய்து பின்பு வெற்றிலையை பயன்படுத்தவும் நாணயங்களைமட்டும்ஒரு தாளில் மடித்து வைக்கவும்.பின்பு அடுத்த வாரம் செய்யும் முன் மேற்கண்டதை உண்டியலில் போட்டு வைக்கவும் இதை தொடர்ச்சியாக செய்துவர பணப்புழக்கம் அதிகரிக்கும்.

03. வளர்பிறையில் வரக்கூடிய திரியை திதி அன்று அன்னதானம் செய்தால் கடன் பிரச்சனை மற்றும் பணப் பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.இதை ஒவ்வொரு மாதமும் செய்யலாம்

04. நல்லசம்பாத்தியம் இருந்தும் பணம் விரயமாகி கொண்டே இருந்தால் தினமும் காலை வேளையில் பறவைகளுக்கு இனிப்பு பிஸ்கட்டுகள் வழங்க வீண்விரயம் கட்டுப்படும்

05. காலை எழுந்த தும் தங்க நாணயம் அல்லது தங்கங்கள் நிறைந்த படம் ரூபாய் நோட்டுக்கள் நிறைந்த படம் ஒன்று பார்த்துவர செல்வ வளம் பெருகும்.

06. கடன் கொடுத்து பெற்ற அவதிப்படுவோர் கட்டாயம் கடுகு எண்ணெயில் உணவு சமைத்து சாப்பிட நன்மை உண்டாகும்

07. எவ்வளவு பெரிய கடன் சுமையால் பாதிக்கப்பட்டு இருந்தாலும் காஞ்சிபுரத்தில் அமர்ந்து அருள்பாலித்துவரும் காமாட்சி அம்மனைஒரு வளர்பிறை சித்திரை நட்சத்திரத்தில் பட்டுப்புடவை சாற்றி வழிபடுவோர்க்கு நிச்சியம் கடன் சுமையில் இருந்து மீட்டு மன நிறைவான வாழ்க்கை உருவாகும்

08. புளியமரத்தின் சிறுகிளையை பணம் வைக்கும் இடத்தில் வியாபார இடத்தில் பணப்பெட்டியில் வைத்து வரவும்

09. வெல்லத்தால் பாயாசம் செய்து தொடர்ந்து 5 நாட்களுக்கு உங்கள் கையால் பசுவிற்கு வழங்கிவரவும்.தொடர்ந்து 5 நாட்களுக்கு பசியால் வாடும் ஒருவருக்கேனும் உணவு உங்கள் கையால் வாங்கி கொடுக்கவும்.

10. வியாழக்கிழமை அன்று கொஞ்சம் குங்கு ம ம் வாங்கி அதை வெள்ளிக்கிழமைகளில் அம்பாள் அல்லது தாயார் சன்னதியில் கொடுத்து வரவும்

11. கோதுமையை இருக்க கொடுக்கும் போது அதில் 7 துளசி இலைகள் மற்றும் சிறிது குங்கும பூ சேர்த்து அரைக்க கொடுத்து வாங்கவும்

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE