பிப்ரவரி 2025 - கும்பம் ராசி பலன்கள்

By செய்திப்பிரிவு

இந்த பிப்ரவரி மாதம் ராசிக்கு 2-ம் வீட்டில் சுக்கிரன் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரங்கள் லாபகரமாக அமையும் கணவன் மனைவி உறவு பலப்படும்.புதிய வாகனம் வாங்கும் யோகமும் சிலருக்கு புதுவீடு கட்டும் அதிர்ஷ்டமும் வரும்.

இம்மாதம் வேறு எந்த கோள்களும் உங்கள் ராசிக்கு பெரிய நற்பலன்களை வழங்காது. ஜென்ச்சனி நடப்பதால் யாரையும் பகைத்துக்கொள்ள வேண்டாம்.

கடன்சுமைகளில் மாட்டிக்கொள்ளாதீர்கள். இம்மாதம் சூரியன் 12-மற்றும் 1ம் இடத்தில் பலவீனபடுவதால்
பெரிய மனிதர்களை பகைத்துக்கொள்ள வேண்டாம்.

அரசியல் செல்வாக்கு குறையும். அரசாங்க பகை வரக்கூடும் கவனம். இம்மாதம் புதனும் பலவீனமாக காணப்படுவதால் ஞாபக மறதி அதிகமாக காணப்படும்
ஏமாற்று பேர்வழிகளிடம் எச்சரிக்கையாக இருக்கவும்.

2-ம் வீட்டில் ராகு இருப்பதால் உடல்நல குறைபாடுகள் வரக்கூடும்.பங்குச்சந்தை முதலீடுகள் தவிற்க்கவும். 8ம் இடத்தில் கேது இருப்பதால் வெளிநாடுகளில் பணிபுரிபவர்களுக்கு பணிச்சுமை அதிக அளவில் காணப்படும்.

வேலை பளு காரணமாக வேலையை விட்டு விடாதீர்கள்.

குரு 4ல் இருப்பதால் தொழில்களுக்கான முதலீடுகள் எதையும் போடாதீர்கள் வரக்கூடிய வருமானம் வந்துக்கொண்டே இருக்கும்.5-ம் வீட்டில் செவ்வாய் இருப்பதால் முன் கோபத்தையும் அவசர முடிவுகளையும் தவிற்க்கவும்.

பிப்ரவரி 15,16,17 சந்திராஷ்டமம்

பரிகாரம்!
வாரம் தோறும் வரக்கூடிய சனிக்கிழமைகளில் வாரஹி அம்மனுக்கு அர்ச்சனையும் வழிபாடும் செய்து வாருங்கள். கால்நடைகளுக்கு தீவனம் கொடுக்கவும் நல்லதே நடக்கும்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE