சனியினால் ஏற்படக்கூடிய நோய்கள்?

By செய்திப்பிரிவு

மருத்துவ ஜோதிடத்தில் சனியின் மூலம் ஏற்படக்கூடிய நோய்களாக,

கால் வலி, வாதநோய் முக்கியமாக முடக்குவாதம், வாயு தொல்லை,

கடின உழைப்பால் ஏற்படும் சோர்வு,  உளநிலை மாற்றம், பித்துப் பிடித்தல், அஜீரணம், இடுப்புக்கீழ் பிரச்னை, அழுக்கு சேரும் பகுதி, அடிவயிற்றுப் பிரச்னைகள்,

பற்சொத்தை,ஹீமோகுளோபின் குறைபாடு,  இரும்பு சத்து குறைபாட்டால் ஏற்படும் உறுப்பு பாதிப்பு, இன்னும் பல ..

சனியால் மற்றும் பாவ கிரக சேர்க்கையால் ஏற்படும் நோய்கள் ..

ஜாதகத்தில் செவ்வாய், சனி நிற்கும் ராசிகள் குறிக்கும் உடல் பாகங்களில் ஏதாவது ஒரு நோய் இருக்கும். சனி கிரகம் ஒருவரின் உடலில் இருக்கும் வாதம், மந்த வாயு தன்மை இவற்றை வெளிப்படுத்தும்.

தீர்வுகளாக சில ...

சனியின் காரகத்துவம் கொண்ட இரும்பு பாத்திரங்களில் சமைக்க வேண்டும். இரும்புச் சத்து உணவுகளை உட்கொள்ள வேண்டும். நல்லெண்ணெய் குளியல் குளிக்க மற்றும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

கால பைரவர் வழிபாடு, நல்லெண்ணெய் தானம் தருதல் ..

வயோதிகர்களுக்கு ஊன்றுகோல் தானமாகக் கொடுத்தல் ..

நல்ல எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுதல் குறிப்பாக எந்த நேரத்திலும் பகைவர்களுக்கு கூட தீமை நினைக்காத ஒரு எண்ணத்தை வளர்த்துக் கொள்ளுதல் நாம் செய்யக்கூடிய ஆகச் சிறந்த பரிகாரமாகும் .

மிக முக்கியமாக, தானும் தன்னைச் சுற்றியுள்ள இடத்தையும் சுத்தமாக வைத்துக்கொள்ளுதல் (ஒரு நாளைக்கு இரண்டு முறை குளித்து உடலை சுத்தம் செய்து கொள்ளுதல் கழிவறை வீட்டில் உள்ள கழிவறை சுத்தமாக வைத்துக் கொள்ளுதல் முதலானவை செய்யக்கூடியவை)

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE