மாந்தி தோஷம் ஆபத்தா?

By செய்திப்பிரிவு

உயிரற்ற ஜடத்தை மாந்திக்கு ஒப்பிடுவார்கள். சனிபகவானின் உயிரற்ற உறுப்பிற்கு மாந்தி என்று பெயர்.

ஒருவர் மரணம் அடைந்தால் அந்த உடலை பொறுப்பேற்கிறார் மாந்தி.
ஒருவர் மரணம் அடைந்து கிடக்கும் பொழுது அவரைக் குறித்து
தீய வார்த்தைகளை சொல்லும் பொழுது மாந்தியின் தோஷத்திற்கு ஆளாகிறோம்.

ஒருவனுடைய ஆயுளுக்கும் அவனுடைய கர்மாவுக்கும் பொறுப்பு ஏற்பவர் சனி பகவான். அவனுடைய கர்ம கணக்கு தீரும் பொழுது அவன் மரணம் அடைகிறான். மரணம் அடைந்த உடலை சனி பகவானின் மைந்தனான மாந்தி பகவான் பொறுப்பேற்கிறார்.

சனிபகவானிடம் இருந்து தப்பியவர்களும் உண்டு. ஆனால் மாந்தி பகவானிடம் இருந்து யாராலும் தப்ப முடியாது.

சனி பகவானின் தோஷத்தால் சிவபெருமானின் திருமண நாளில் புரோகிதராக இருந்த பிரம்மாவின் ஒரு தலையை அவர் பிடுங்கியதால் உயிரற்ற அந்த தலை சிவ பெருமானின் கையோடு ஒட்டிக்கொண்டு அவஸ்தை பட்டார்.

உலகத்துக்கே படி அளந்து கொண்டிருந்த சிவபெருமான் சனியின் கோரப்பிடியிலும், மாந்தி பகவானின் செயலினாலும் உயிரற்ற பிரம்மாவின் தலை திருவோடாக மாறி பிச்சை எடுக்கிற நிலைமைக்கு வந்தார்.

ஒரு மனிதனோடு உங்களுக்கு ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் அந்த மனிதன் மரித்து விட்டால் அந்த நாளில் அவரைக் குறித்து தவறான காரியங்களையோ, செயல்களையோ, சொல்களையோ பயன்படுத்தாமல் இருங்கள்.

ஒரு மனிதன் மரித்த நாளில் அவரைக் குறித்து தீய காரியங்கள்,கெட்ட வார்த்தைகளை சொல்லி அவரை தூசிப்பது போன்றவை மாந்தி பகவானை உங்கள் தலைமுறைக்கு அழைப்பு விடுக்கும் செயலாகும்.

மாந்தி பகவானின் தோஷ நிவர்த்திக்காக நம் முன்னோர்கள் சொன்ன பரிகாரம் நல்ல காரியத்துக்கு செல்லாவிட்டாலும், "கெட்ட காரியத்திற்கு சென்று கண்ணீர் விடு" என்று.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE