இன்றைய ராசி பலன்கள் - 14-10-2024 திங்கட் கிழமை

By செய்திப்பிரிவு

மேஷம்

 

மேஷ ராசி நண்பர்களே,பண வரவு நன்றாக இருக்கும். ஆவலுடன் எதிர்பார்த்த காரியம் நடக்கும். உடலுக்கு ஏற்ற உணவு வகைகளை உட்கொள்ளவும். வெளிவட்டாரத்தில் நல்ல அனுபவம் கிடைக்கும். புது தொழில் யோகம் அமையும்.

 

ரிஷபம்

 

ரிஷப ராசி நண்பர்களே, குடும்ப பெருமை உயரும். கணவன் மனைவி உறவு பலப்படும்.திட்டமிட்டது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும் யாரையும் நம்பாதீர்கள் .வாகன பராமரிப்பு செலவுகள் கூடும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பாதையில் செல்லும்.

 

மிதுனம்

 

மிதுன ராசி நண்பர்களே, குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும். எதிர்மறை எண்ணங்களை மனதில் இருந்து நீக்கவும். புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். ஆன்மீகத்தில்  ஆர்வம் கூடும். தொழில், வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும் .

 

கடகம்

 

கடக ராசி நண்பர்களே, மற்றவர்களை நம்பி எதையும் செய்யாமல் இருப்பது நல்லது. வேண்டியவர்களை பகைத்துக்கொள்ள வேண்டாம். காரிய அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரம் மேன்மையடையும். சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமும் நிதானமும் அவசியம்.

 

சிம்மம்

 

சிம்ம ராசி நண்பர்களே, எதிர்பாராத பயணங்களால் அலைச்சல் ஏற்படும். பிறருக்கு வாக்கு கொடுப்பதில் கவனம் தேவை. பண விவகாரங்களில் மிகுந்த கவனம் தேவை.வாகனத்தில் மெதுவாக செல்லவும்.தொழில், வியாபாரத்தில் போட்டிகள் குறையும்.

 

கன்னி

 

கன்னி ராசி நண்பர்களே, எதையும் வெளிப்படையாக பேசுவது நல்லது. ஒிவு மறைவு வேண்டாம்.உறவினர்களிடம் அடிக்கடி வாதம் செய்ய வேண்டாம். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

 

துலாம்

 

துலாம் ராசி நண்பர்களே, குடும்ப பாரம் சுமையாக இருக்கும். அடுத்தவர் விமர்சனத்திற்கு செவி சாய்க்க வேண்டாம். கணவன் மனைவிக்கிடையே சின்ன மனஸ்தாபம் வரும். உத்யோகத்தில் வேலைச்சுமை குறையும்.தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.

 

விருச்சிகம்

 

விருச்சிக ராசி நண்பர்களே, பிரபலங்களின் தொடர்பு உற்சாகம் தரும். எதிர்த்து நின்றவர்கள் கூட ஒதுங்கி போவர். காரிய தடை விலகும். பண தேவைகள் பூர்த்தியாகும் நினைத்த காரியம் நிறைவேறும்.உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

 

தனுசு

 

தனுசு ராசி நண்பர்களே, வீண் விவகாரங்களில் தலையிட வேண்டாம். பிராத்தனைகள் நிறைவேறும். முக்கியமான காரியங்களை தனித்து நின்று செய்யவும். சகோதரர்களிடம் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் விட்டுக்கொடுத்து போவது நலம்.தொழில், வியாபாரம் சிறப்பாக நடக்கும்.

 

மகரம்

 

மகர ராசி நண்பர்களே, மனம் அமைதி பெறும் .உற்சாகமாக காணப்படுவீர்கள் .குடும்ப பிரச்னைகள் ஓரளவு குறையும். தெய்வ வழிபாடு நன்மை தரும். யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரியவரும்.

 

கும்பம்

 

கும்ப ராசி நண்பர்களே, குடும்பத்தாரின் நன்மதிப்பை பெற முடியும். மற்றவர்களை அதிகம் நம்பி ஏமாற வேண்டாம். நண்பர்களுடன் நல்லுறவு ஏற்படும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.ராசிக்குள் சந்திரன் இருப்பதால் மனக்குழப்பம் காணப்படும் யாருக்கும் வாக்குறுதிகளை வழங்காதீர்கள்.

 

மீனம்

 

மீன ராசி நண்பர்களே, நினைத்ததை நினைத்த நேரத்தில் முடிக்க முடியும். தவிர்க்க முடியாத செலவுகள் வரும். பிரியமானவர்கள் அன்பு பாராட்டுவர்.பெரிய மனிதர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும்.  தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்

.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE