கண்திருஷ்டி - அதை எப்படி போக்குவது தெரியுமா?

By

கண்திருஷ்டி இதனை கேட்டால் சில நபர்களுக்கு நகைப்புதான் வரும் ஆனால், இது உண்மை என அதன் மூலம் பயன்பெற்றவர்களுக்கு தான் தெரியும்.  கண் திருஷ்டி, தோஷத்தால் பாதிக்கப்பட்டவரின் வீட்டில் தொடர்ந்து ஏதாவது பிரச்னைகள், தடைகள், சோகம், பிரிவு, நஷ்டம், கைப்பொருள் இழப்பு என வரிசையாக ஒன்றன்பின் ஒன்றாக வந்துகொண்டே இருக்கும்.

நம் வீட்டிற்குள் கெட்ட சக்தி நுழையாமல் தடுக்கவும்,கெட்ட எண்ணம் உடைய மனிதர்களின் தாக்கம் பாதிக்காமல் இருக்கவும்,கண் திருஷ்டி விலகவும் வீட்டு வாசலில் வளர்பிறை வெள்ளிக்கிழமையில் கற்றாழை கட்டி தொங்கவிடலாம். வாசலில் ஒரு எலுமிச்சை, ஒரு பச்சை மிளகாய் என மாற்றி மாற்றி 3 எலுமிச்சை நான்கு பச்சை மிளகாய் என கெட்டியான கயிறில் கோர்த்து தொங்கவிடலாம்.செவ்வாய் கிழமையில் இதைச் செய்ய வேண்டும்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE