மேஷம்
குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் உண்டு. அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். நெருங்கிய உறவினர்களால் நன்மைகள் உண்டு. உத்யோகத்தில் பொறுப்புகள் கூடும்.
ரிஷபம்
யாரிடமும் அதிகம் உரிமை எடுத்துக்கொள்ள வேண்டாம். நல்லவர்களின் தொடர்பால் ஆதாயம் உண்டு. எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெறும்.
மிதுனம்
நீண்ட நாள் திட்டங்கள் நிறைவேறும். விஐபிகளின் அறிமுகம் கிடைக்கும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். தொழில், வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும்.
மாலை 06:10 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளது.
கடகம்
அடுத்தவர்களை குறை சொல்வதை தவிர்க்கவும். கொடுக்கல், வாங்கலில் கவனமாக இருக்கவும். தேக ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.
சிம்மம்
குடும்பத்தில் ஆதரவு பெருகும். வேண்டியவர்கள் சிலர் பகைமை பாராட்டுவர். வாகனத்தில் மெதுவாக செல்லவும். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.
கன்னி
யதார்த்தமாக பேசுவதை கூட சிலர் தவறாக புரிந்துகொள்வர். வேண்டுதல் நிறைவேறும். பெரியோர்களின் ஆலோசனை கிடைக்கும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.
துலாம்
பிரியமானவர்களிடம் விட்டுக்கொடுத்து போகவும். தொட்ட காரியங்களில் வெற்றி பெற முடியும். கடன் நெருக்கடி இருக்கும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.
விருச்சிகம்
நேர்த்தியான செயல்களால் பலரது பாராட்டு கிடைக்கும். புது நட்பு வட்டம் உருவாகும். கணவன் மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். உத்யோக மாற்றம் ஏற்படும்.
தனுசு
குடும்பத்தில் அனுசரித்து போகவும். திட்டமிட்ட செயல்கள் ஒன்றன் பின் ஒன்றாக நடக்கும். விருந்தினர்கள் வருகை இருக்கும். உத்யோகத்தில் இருந்த தடை நீங்கும்.
மகரம்
எல்லாரிடமும் நட்புடன் பழகும் சுபாவம் இருக்கும். வராமல் நின்ற பணம் கைக்கு வரும். கணவன் மனைவிக்குள் இருந்த மனஸ்தாபம் நீங்கும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.
கும்பம்
குடும்ப வருமானம் உயரும். தேவையற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். உறவினர்களால் செலவினங்கள் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் கூடும்.
மீனம்
குடும்ப சிக்கல்கள் குறையும். யாரிடத்திலும் விவாதம் செய்ய வேண்டாம். இரவு நேர பயணங்களை தவிர்க்கவும். தொழில், வியாபாரம் சீராக இருக்கும்.