கும்பம் - ராகு+கேது பெயர்ச்சி பலன்கள் 2026

By செய்திப்பிரிவு

டிசம்பர் 5, 2026, கார்த்திகை 19-ம் தேதி சனிக்கிழமை இரவு 10:32 மணிக்கு திருக்கணிதப் பஞ்சாங்கக் கணிப்புப்படி ராகு+கேது பெயர்ச்சி நிகழ்கிறது.

இடம் மாற்றம்: ராகு கும்ப ராசியிலிருந்து மகர ராசிக்கு (அவிட்டம் 3-ம் பாதத்திலிருந்து 2-ம் பாதத்திற்கு) பெயர்ற்சியாகிறார்.

கேது பெயர்ச்சி: கேது சிம்ம ராசியிலிருந்து கடக ராசிக்கு (மகம் 1-ம் பாதத்திலிருந்து ஆயில்யம் 4-ம் பாதத்திற்கு) பெயர்ச்சியாகிறார்.
கால அளவு: ராகு-கேது மாற்றங்கள் சுமார் 18 மாதங்களுக்கு ஒருமுறை நிகழ்வதாகும்.

கும்பம் - ராகு+கேது பெயர்ச்சி பலன்கள் 2026

வருகின்ற டிசம்பர் மாதம் 5-ம் தேதி நடைபெறக்கூடிய ராகு +கேது பெயர்ச்சி பலன்களில் ராசிக்குள் இருந்த ராகு 12-ம் இடத்திற்கும் 7-ம் இடத்தில் இருந்த கேது 6-ம் இடத்திற்கும் பின்னோக்கி செல்கிறார்கள்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக உங்கள் ராசிக்கு ராகு கேதுவால் எந்த நற்பலன்களும் கிடைக்கவில்லை இந்த ராகு, கேது பெயர்ச்சியில் கேதுபகவான் 6-ம் இடமான உபஜெய ஸ்தானத்துக்கு வருவதால் நன்மைகள் பல காணலாம் புதிய தொழில் மூலமாக நல்ல வருமானத்தை பெறுவீர்கள், உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கும், சொத்துக்கள் வாங்கும் யோகமும் உண்டாகும் கடன் தொல்லைகள் இருப்பவர்களுக்கு கடன்சுமை சிறுக சிறுக குறையும், பண சேமிப்புகள் உண்டாகும் புதிய முதலீடுகளால் நல்ல லாபத்தை பெறுவீர்கள், குடும்பத்தில் அமைதியும் சந்தோஷமும் நிலைத்திருக்கும், கணவன் மனைவிக்குள் அன்னியோன்யம் உண்டாகும் ஆன்மீக எண்ணங்கள் மேலோங்கும் வெளியூர் பயணங்களால் ஆதாயம் அடைவீர்கள்,

ராசிக்குள் இருந்த ராகு 12-ம் இடமான விரைய ஸ்தனத்துக்கு செல்வதால் விரைய செலவுகள் உண்டாகும் ஆடம்பர செலவுகளை குறைக்கவும், குறிப்பாக கடன் வாங்குவதை தவிர்க்கவும், யாரையும் முழுமையாக நம்பி விடாதீர்கள் தொழில் வியாபார விஷயமாக வெளியூர் செல்ல நேரிடும் வெளியூர் அல்லது வெளிநாடுகளில் தங்கியிருந்து வேலை பார்க்க வேண்டிவரும்.வெளிநாடு வேலைவாய்ப்பு தேடுபவர்களுக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் உருவாகும்.

பரிகாரம்.
வாரந்தோறும் வரக்கூடிய சனிக்கிழமைகளில் நவகிரக சனிபகவான் வழிபாடும் இயலாதவருக்கு உணவும் வழங்கி வாருங்கள் கால்நடைகளுக்கு தீவனம் வாங்கி தாருங்கள் நல்லதே நடக்கும்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE
▼