மகரம் - ராகு+கேது பெயர்ச்சி பலன்கள் 2026

By செய்திப்பிரிவு

டிசம்பர் 5, 2026, கார்த்திகை 19-ம் தேதி சனிக்கிழமை இரவு 10:32 மணிக்கு திருக்கணிதப் பஞ்சாங்கக் கணிப்புப்படி ராகு+கேது பெயர்ச்சி நிகழ்கிறது.

இடம் மாற்றம்: ராகு கும்ப ராசியிலிருந்து மகர ராசிக்கு (அவிட்டம் 3-ம் பாதத்திலிருந்து 2-ம் பாதத்திற்கு) பெயர்ற்சியாகிறார்.

கேது பெயர்ச்சி: கேது சிம்ம ராசியிலிருந்து கடக ராசிக்கு (மகம் 1-ம் பாதத்திலிருந்து ஆயில்யம் 4-ம் பாதத்திற்கு) பெயர்ச்சியாகிறார்.
கால அளவு: ராகு-கேது மாற்றங்கள் சுமார் 18 மாதங்களுக்கு ஒருமுறை நிகழ்வதாகும்.

மகரம் - ராகு+கேது பெயர்ச்சி பலன்கள் 2026

ராசிக்கு 8-ம் இடத்தில் இருந்த கேது 7ம் இடத்திற்கும் 12-ம் இடத்தில் இருந்த ராகு ராசிக்குள்ளும் வருகிறார்கள்.

ராசிக்குள் அமர்ந்த ராகு பல குழப்பங்களை உண்டு பண்ணுவார் எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் நிதானமாக யோசித்து முடிவு எடுக்கவும் பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில் மிகுந்த கவனத்தை செலுத்தவும், உடல் நல குறைபாடுகளும் மருத்துவ செலவுகளும் வரக்கூடும் கூடுமானவரை வீட்டு உணவுகளை உட்கொள்ளவும் யாருக்கும் ஜாமீன்கள் கைழுத்துக்கள் போடாதீர்கள்.

ராசிக்கு 7ம் இடத்தில் கேது பகவான் சஞ்சரிப்பதால் குடும்ப உறவுகளுக்குள் மனக்கசப்புகள் வரக்கூடும் நண்பர்களுடனும் கூட்டுத் தொழில்களும் செய்பவர்கள் கவனத்துடன் செயல்படவும் தொழில்களில் வருமானம் நன்றாக இருந்தாலும் செலவுகள் அதிகமாக காணப்படும்.
பொது ராசிபலன்கள் என்பது பொதுவான பலன்கள் ஆகும்.

கோச்சார கிரகங்களை மையப்படுத்தி சொல்லக்கூடிய பலன்கள் சுய ஜாதத்தில் உள்ள கிரக நிலைகளும் தசா புத்திகளுமே நம்மை வழிநடத்தும் என்பதை நினைவில் கொள்ளவும்.

பரிகாரம்!
அருகில் இருக்கும் பராமரிப்பின்றி கிடக்கும் பழமையான சிவாலயங்களுக்கு சென்று பராமரிப்பு வேலை செய்யுங்கள் வருடத்துக்கு ஒருமுறை எனும் குலதெய்வ கோயிலுக்கு சென்று வாருங்கள் நல்லதே நடக்கும்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE
▼