விருச்சிகம் - ராகு+கேது பெயர்ச்சி பலன்கள் 2026

By செய்திப்பிரிவு

டிசம்பர் 5, 2026, கார்த்திகை 19-ம் தேதி சனிக்கிழமை இரவு 10:32 மணிக்கு திருக்கணிதப் பஞ்சாங்கக் கணிப்புப்படி ராகு+கேது பெயர்ச்சி நிகழ்கிறது.

இடம் மாற்றம்: ராகு கும்ப ராசியிலிருந்து மகர ராசிக்கு (அவிட்டம் 3-ம் பாதத்திலிருந்து 2-ம் பாதத்திற்கு) பெயர்ற்சியாகிறார்.

கேது பெயர்ச்சி: கேது சிம்ம ராசியிலிருந்து கடக ராசிக்கு (மகம் 1-ம் பாதத்திலிருந்து ஆயில்யம் 4-ம் பாதத்திற்கு) பெயர்ச்சியாகிறார்.

கால அளவு: ராகு-கேது மாற்றங்கள் சுமார் 18 மாதங்களுக்கு ஒருமுறை நிகழ்வதாகும்.

விருச்சிகம் - ராகு+கேது பெயர்ச்சி பலன்கள் 2026

இதுவரை ராசிக்கு 4-ம் இடத்தில் இருந்த ராகுபகவான் மூன்றாம் இடத்திற்கும் 10-ம் இடத்தில் இருந்த கேது 9-ம் இடத்திற்கும் இடப்பெயர்ச்சி ஆகிறார்.

ராகு 4-ம் இடத்தில் இருந்து 3-ம் இடத்திற்கு வருவது சிறப்பான பலன்களை தரப் போகிறார் 3-ம் இடம் என்பது தைரிய ஸ்தானம் என்பதால் துணிச்சலாக எதையும் செய்து முடிப்பீர்கள் போட்டி தேர்வில் வெற்றி பெறுவீர்கள் எதிரிகள் தொல்லை குறையும்

புதிய தொழில் மூலமாக நல்ல வருமானத்தை பெறுவீர்கள் புதிய வாகன யோகம் சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.

குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும் பொன் பொருள் சேர்க்கை உண்டாகும் கடன் சுமைகள் சிறுக சிறுக குறையும் ராகு என்பது அந்நிய தேசத்தை குறிப்பதால் வெளிநாடு வேலை வாய்ப்புகள் உருவாகும்.

வெளிநாடு சென்று கல்வி பயிலும் யோகமும் மாணவர்களுக்கும் உண்டாகும்.

10-ம் இடத்திலிருந்து கேது 9-ம் இடத்திற்கு பின்னோக்கி செல்வதால் பூர்வீகத்தை விட்டு வெளியே செல்ல வேண்டி வரும் தொழில் வியாபாரத்தில் அலைச்சல் அதிகமாக இருக்கும் வருமானத்துக்கு ஏற்க செலவுகளும் உண்டாகும்.

தந்தை மகனுக்குள் அடிக்கடி வாக்குவாதங்கள் உண்டாகும் தந்தைக்கு மருத்துவ செலவுகளும் உண்டாகும், ஆன்மீகப் பயணங்கள் கோயில் வழிபாட்டு தலங்களுக்கு சென்று வருவீர்கள் வீட்டில் சுபச் செலவுகளும் உண்டாகும்.

பரிகாரம்
அமாவாசை திதியன்று குலதெய்வ வழிபாடும் அருகில் இருக்கும் நவகிரக ஆலயங்களில் இருக்கும் நாகர் வழிபாடும் செய்யவும்.
முடிந்தால். நாகர்கோவில் நாகராஜா கோவில் திருப்பாம்புரம், திருநாகேஸ்வரம், காளஹஸ்தி, போன்ற நாக ஆலயங்களுக்கு சென்று வழிபடவும் நல்லது தான் நடக்கும்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE
▼