டிசம்பர் 5, 2026, கார்த்திகை 19-ம் தேதி சனிக்கிழமை இரவு 10:32 மணிக்கு திருக்கணிதப் பஞ்சாங்கக் கணிப்புப்படி ராகு+கேது பெயர்ச்சி நிகழ்கிறது.
இடம் மாற்றம்: ராகு கும்ப ராசியிலிருந்து மகர ராசிக்கு (அவிட்டம் 3-ம் பாதத்திலிருந்து 2-ம் பாதத்திற்கு) பெயர்ற்சியாகிறார்.
கேது பெயர்ச்சி: கேது சிம்ம ராசியிலிருந்து கடக ராசிக்கு (மகம் 1-ம் பாதத்திலிருந்து ஆயில்யம் 4-ம் பாதத்திற்கு) பெயர்ச்சியாகிறார்.
கால அளவு: ராகு-கேது மாற்றங்கள் சுமார் 18 மாதங்களுக்கு ஒருமுறை நிகழ்வதாகும்.
கன்னி - ராகு+கேது பெயர்ச்சி பலன்கள் 2026
இதுவரை ராசிக்கு 12-ம் இடத்தில் அமர்ந்த கேது 11-ம் இடத்திற்கும் 6-ம் இடத்தில் அமர்ந்திருந்த ராகு 5-ம் இடத்துக்கும் பெயற்ச்சியாகிறார்கள்.
உங்கள் ராசிக்கு கேது பகவானால் ஆதாயம் கிடைக்கப் போகிறது 11-ம் இடம் என்பது லாப ஸ்தானமாக கருதப்படுவதாலும் அசுபவம் பெற்ற கோள்கள் 3-6-10-11 ம் இடங்கள் உப ஜெய ஸ்தானமாக கருதப்படுவதாலும் அசுபம் பெற்ற கோள்கள் இந்த இடங்களில் அமர்ந்தால் நற்பலன்களை வாரி வழங்குவார்கள் தொழில் வியாபாரங்கள் செழிப்படையும் பண சேமிப்புகள் உண்டாகும் கூட்டுத் தொழில் மூலமாக நல்ல வருமானம் கிடைக்கும் கேது அமர்ந்த இடம் நீர் ராசியாக இருப்பதால் வெளிநாடு வேலை வாய்ப்புகள் உருவாகும் மாணவர்கள் வெளிநாடு சென்று மேற்படிப்பு படிக்கவும் யோகம் உண்டாகும் தொழில் வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாளுவீர்கள் வருமானம் பன் மடங்கு உயரம் வீடு.மனை. சொத்துக்கள் வாங்கும் யோக அமைப்பு உண்டு.
6-ம் இடத்தில் அமர்ந்திருந்த ராகு 5-ம் இடத்திற்கு பின்னோக்கி வருவதால் பிள்ளைகளிடம் கன்வாக நடந்து கொள்ளுங்கள் யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம் புதிய மனிதர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும் தொழில், வியாபாரத்தில் அலைச்சல் அதிகமாக காணப்படும் செலவுகளும் உண்டாகும் யாரையும் முழுமையாக நம்பி விடாதீர்கள் யாருக்கும் ஜாமீன் கையெழுத்துக்கள் போடாதீர்கள்.
பரிகாரம்:
அமாவாசை அல்லது பௌர்ணமி திதி அன்று குடும்பத்துடன் குலதெய்வ கோயிலுக்கு சென்று வாருங்கள் வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் அம்பாள் வழிபாடும் குடும்ப அர்ச்சனை செய்து வாருங்கள் நல்லதே நடக்கும்.