கடகம் - ராகு+கேது பெயர்ச்சி பலன்கள் 2026

By செய்திப்பிரிவு

டிசம்பர் 5, 2026, கார்த்திகை 19-ம் தேதி சனிக்கிழமை இரவு 10:32 மணிக்கு திருக்கணிதப் பஞ்சாங்கக் கணிப்புப்படி ராகு+கேது பெயர்ச்சி நிகழ்கிறது.

இடம் மாற்றம்: ராகு கும்ப ராசியிலிருந்து மகர ராசிக்கு (அவிட்டம் 3-ம் பாதத்திலிருந்து 2-ம் பாதத்திற்கு) பெயர்ற்சியாகிறார்.

கேது பெயர்ச்சி: கேது சிம்ம ராசியிலிருந்து கடக ராசிக்கு (மகம் 1-ம் பாதத்திலிருந்து ஆயில்யம் 4-ம் பாதத்திற்கு) பெயர்ச்சியாகிறார்.
கால அளவு: ராகு-கேது மாற்றங்கள் சுமார் 18 மாதங்களுக்கு ஒருமுறை நிகழ்வதாகும்.

கடகம் - ராகு+கேது பெயர்ச்சி பலன்கள் 2026

இதுவரை 12-ம் இடத்தில் இருந்த கேது ராசிக்குள்ளும் 8-ம் இடத்தில் அமர்ந்திருந்த கேது ஏழாம் இடத்திற்கும் பின்னோக்கி வருகிறார்கள்.
ராசிக்குள் கேது வருவதால் சில குழப்ப நிலைகள் உண்டாகும் பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில் மிகுந்த கவனத்தை செலுத்தவும் உடல் ஆரோக்கிய குறைபாடுகள் வரக்கூடும் உணவு விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்கவும் கூடுமானவரை வீட்டு உணவுகளை உட்கொள்ளவும் தொழில் வியாபாரம் நல்ல வருமானத்தை தந்தாலும் வரவுக்கேற்ப செலவுகளும் உண்டாகும் எதை செய்தாலும் முன் யோசனை இன்றி செய்யாதீர்கள்.

7-ம் இடத்தில் ராகு சஞ்சரிப்பதால் கணவன் மனைவிக்குள் அடிக்கடி பிணக்குகள் வரக்கூடும் பனிப்போர் உருவாகும் ஒருவருக்குள் ஒருவர் விட்டுக் கொடுத்துப் போவது நன்று உறவினர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும் யாருக்கும் ஜாமின் கையெழுத்துக்கள் போட்டு விடாதீர்கள் நண்பர்களாலும் சில தொல்லைகள் வரக்கூடும் வண்டி வாகனங்கள் செல்லும் பொழுது நிதானத்துடன் கையாளவும் வேலையில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகமாக காணப்படும் வேனலையில் திருப்தி இருக்காது தேவையில்லாமல் பணியிட மாற்றங்கள் செய்ய வேண்டாம்.

தொழில் வியாபாரங்கள் மத்திம பலனை தரும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் உண்டாகும்.

பரிகாரம் : வாரந்தோறும் வரக்கூடிய செவ்வாய்க்கிழமைகளில் வாராகி அம்மன் வழிபாடு செய்து வரவும் இயலாதவர்களுக்கு உணவும் உடையும் வழங்கி வாருங்கள்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE
▼