டிசம்பர் 5, 2026, கார்த்திகை 19-ம் தேதி சனிக்கிழமை இரவு 10:32 மணிக்கு திருக்கணிதப் பஞ்சாங்கக் கணிப்புப்படி ராகு+கேது பெயர்ச்சி நிகழ்கிறது.
இடம் மாற்றம்: ராகு கும்ப ராசியிலிருந்து மகர ராசிக்கு (அவிட்டம் 3-ம் பாதத்திலிருந்து 2-ம் பாதத்திற்கு) பெயர்ற்சியாகிறார்.
கேது பெயர்ச்சி: கேது சிம்ம ராசியிலிருந்து கடக ராசிக்கு (மகம் 1-ம் பாதத்திலிருந்து ஆயில்யம் 4-ம் பாதத்திற்கு) பெயர்ச்சியாகிறார். கால அளவு: ராகு-கேது மாற்றங்கள் சுமார் 18 மாதங்களுக்கு ஒருமுறை நிகழ்வதாகும்.
மிதுனம் - ராகு+கேது பெயர்ச்சி பலன்கள் 2026
இதுவரை மூன்றாம் இடத்தில் இருந்த கேது 2-வது இடத்திற்கும் 9-ம் இடத்திலிருந்து ராகு அஷ்டமஸ்தானமான 8-ம் இடத்திற்கும் பின்னோக்கி வருகிறார் ராகு + கேது பெயர்ச்சி பலன்களில் உங்கள் ராசிக்கு பெரிய பலன்கள் தரப் போவதில்லை.
கோச்சாரப் பலன்கள் என்பது பொதுவான பலன்கள் ஆகும் நமது சுய ஜாதகத்தில் இருக்கக்கூடிய தசா புத்திகளும் கிரக நிலையும் நம்மை வழி நடத்தும் பொது பலன்கள் என்பது பொதுவானது.
அஷ்டம ஸ்தானத்தில் இருக்கக்கூடிய ராகு உணவு உடல் நலக் குறைபாடுகளை உருவாக்குவார் மருத்துவ செலவுகள் உண்டாகும். வீண் விரைய செலவுகள் குறைத்துக் கொள்ளவும் ஆடம்பர செலவுகள் தவிர்க்கவும் யாரையும் முழுமையாக நம்பி விடாதீர்கள் கூடுமானவரை கடன் வாங்காமல் பார்த்துக் கொள்ளவும் தொழில் விரிவாக்கங்கள் எதையும் செய்ய வேண்டாம் வரக்கூடிய வருமானம் வந்து கொண்டே இருக்கும்.
வெளியூர் பயணங்களால் அலைச்சல் உண்டாகும் உத்தியோகம் வேலை காரணமாக குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்கக்கூடிய சூழல் உருவாகும் வருவதற்கு ஏற்ப செலவுகளும் உண்டாகும்.
2-ம் இடத்தில் இருக்கக்கூடிய கேது யாரிடமும் அதிகமான வார்த்தைகளை பயன்படுத்தாதீர்கள் குடும்ப நலனின் அக்கறை செலுத்துங்கள் புதிய நபர்கள் எச்சரிக்கையாக இருங்கள் யாருக்கும் வாக்குறுதிகளை வழங்க வேண்டாம்.
கேது ஆன்மீகத்துக்கும் சேர்ந்த கோள் என்பதால் கோயில் வழிபாடுகள் குலதெய்வ வழிபாடு செய்து வாருங்கள் நன்மை நடக்கும் மனபாரங்கள் குறையும்.
பரிகாரம்:
வாரம்தோறும் வரக்கூடிய சனிகிழமைகளில் விநாயகப் பெருமானுக்கு அர்ச்சனை செய்து வரவும் இயலாதவர்களுக்கு உணவு வழங்குங்கள் நல்லதே நடக்கும்.