டிசம்பர் 5, 2026, கார்த்திகை 19-ம் தேதி சனிக்கிழமை இரவு 10:32 மணிக்கு திருக்கணிதப் பஞ்சாங்கக் கணிப்புப்படி ராகு+கேது பெயர்ச்சி நிகழ்கிறது.
இடம் மாற்றம்: ராகு கும்ப ராசியிலிருந்து மகர ராசிக்கு (அவிட்டம் 3-ம் பாதத்திலிருந்து 2-ம் பாதத்திற்கு) பெயர்ற்சியாகிறார்.
கேது பெயர்ச்சி: கேது சிம்ம ராசியிலிருந்து கடக ராசிக்கு (மகம் 1-ம் பாதத்திலிருந்து ஆயில்யம் 4-ம் பாதத்திற்கு) பெயர்ச்சியாகிறார்.
கால அளவு: ராகு-கேது மாற்றங்கள் சுமார் 18 மாதங்களுக்கு ஒருமுறை நிகழ்வதாகும்.
மேஷம் - ராகு+கேது பெயர்ச்சி பலன்கள் 2026
டிசம்பர் மாதம் 5ம் தேதி நடைபெறக்கூடிய ராகு + கேது பெயர்ச்சி பலன்களில் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கும் என்பதை காண்போம்.
ராசிக்கு 11-ம் இடத்தில் இருந்த ராகு 10-ம் இடத்துக்கு பின்நோக்கி செல்கிறார் 10-ம் இடம் என்பது தொழில் ஸ்தானத்தை குறிப்பதாலும்
அசுப கோள்கள் 3-6-10-11-ம் இடங்களில் அமர்ந்தால் உபஜெய ஸ்தானங்களாக கருதப்படுவதால்
ராகு நற்பலன்களை வாரி வழங்குவார்.
புதிய தொழில்கள் மூலமாக நல்ல லாபத்தை பெறுவீர்கள் செய்யும் தொழிலில் வருமானம் பெருகும்.
வெளிநாடு வேலைக்கு முயற்ச்சி செய்பவர்களுக்கு வெளிநாடு வேலை வாய்புகள் உருவாகும்.
அன்னிய மொழிகாரர்களின் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். புதிய வண்டி வாகன யோகமும் உண்டாகும்.
இதுவரை 5-ம் இடத்தில் இருந்த கேது 4-ம் இடத்துக்கு பின்னோக்கி வருவதால் 4-ம் பாவகத்தின் காரகத்துவங்கள் கெட்டுவிடும்.
5- மற்றும் 4 -ம் இடங்கள் அசுப கோள்களுக்கு நல்ல இடம் இல்லை.
தாயாரின் உடல் நலத்தில் கவனம் செலுத்தவும். சொத்துக்கள் வாங்கும்பொழுது பத்திர பதிவுகளில்
கவனம் செலுத்தவும். பழைய வாகனங்கள் மாற்ற வேண்டி வேண்டும்.
மொபைல் போன், லேப்டாப் போன்ற எலக்ட்ரிக்கல் பொருட்கள் பழுதாகும்.
செலவுகள் வைக்கும்.
கணவன் மனைவிக்குள் தேவையில்லாத வாக்கு வாதங்கள் தவிர்கவும்.
பரிகாரம்: வாரம் தோறும் செவ்வாய்கிழமைகளில் நவகிரக ராகு வழிபாடும் துர்கை அம்மன் வழிபாடும் செய்து வரவும் நல்லது நடக்கும்.