மேஷம்
குடும்பத்தில் ஆதரவு பெருகும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். விரும்பிய பொருட்களை வாங்க முடியும். உத்யோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும்.
ரிஷபம்
குடும்பத்தில் மனம் விட்டு பேசுவீர்கள். அடிக்கடி உணர்ச்சி வசப்படுவதை தவிர்க்கவும். பண விஷயத்தில் கறாராக இருக்கவும். தொழில், வியாபாரத்தில் ஆர்வம் பிறக்கும்
மிதுனம்
குடும்ப சுமை அதிகமாகும். வசீகரப் பேச்சால் பல விஷயங்களை சாதிப்பீர்கள். புது நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
கடகம்
பொருளாதார நிலையில் ஏற்றம் உண்டு. வெளியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். தொழில், வியாபாரம் செழிப்படையும்
சிம்மம்
குடும்பத்தில் வரவிற் கேற்ற செலவுகள் இருக்கும். தியானம் மன வலிமையை தரும். சொன்ன சொல்லை காப்பாற்ற முடியும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெறும்.
கன்னி
மனதில் தெளிவு நிலை உண்டாகும். நல்லவர்களின் தொடர்பு நன்மை தரும். திருமண பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.
துலாம்
குடும்பத்தில் பழைய அமைதி மீண்டும் திரும்பும். எதையும் திட்டமிட்டு செய்தால் வெற்றி நிச்சயம். பராமரிப்பு செலவு அதிகமாகும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.
விருச்சிகம்
குடும்ப நலனில் அக்கறைகொள்ளவும். பெற்றோரின் அறிவுரை கேட்டு நடப்பது நல்லது. நண்பர்களிடத்தில் இருந்த பகைமை மாறும். புது தொழில் யோகம் அமையும்.
தனுசு
குடும்ப தேவைகள் அதிகமாகும். மற்றவர்களை சார்ந்து இருக்க வேண்டாம். கட்டுப்படுத்த முடியாத செலவுகள் வரும். உத்யோக மாற்றம் ஏற்படும்.சந்திராஷ்டமம் நீடிப்பதால் கவனம் தேவை.
மகரம்
சுற்றி இருப்பவர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். தடைப்பட்ட காரியம் விரைவில் முடியும். உடல் ஆரோக்யத்தில் கவனம் தேவை. தொழில், வியாபாரம் சூடு பிடிக்கும்.
கும்பம்
ஆன்மீக சிந்தனை மேலோங்கும். மனதிற்கு இதமான செய்தி வரும். எதிர்கால நலன் கருதி புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.
மீனம்
குடும்பத்தில் இருந்த குழப்ப நிலை நீங்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி முக்கிய பொருள் சேர்க்கை உண்டாகும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.