இன்றைய ராசி பலன்கள் - (29-09-2026 செவ்வாய் கிழமை)

By செய்திப்பிரிவு

மேஷம்
குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறை இருக்காது. தியானம் மன அமைதியை தரும். திருமண பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். உத்யோக மாற்றம் ஏற்படும்.

ரிஷபம்
சொந்த பந்தங்கள் கேட்டதை செய்து தர இயலும். எதிர்பார்த்த இடத்தில் உதவி கிடைக்கும். பயணங்களில் கவனம் தேவை. உத்யோகத்தில் அலைச்சல் இருக்கும்.

மிதுனம்
உறவினர்கள் சிலர் நேசக்கரம் நீட்டுவர். யாரையும் எளிதில் நம்ப வேண்டாம். வாகனங்களில் மெதுவாக செல்லவும். உத்யோகத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் தீரும்.

கடகம்
குடும்பத்தில் சுக சௌக்கியம் ஏற்படும். பிரியமானவர்கள் நேசத்தைப் பெற முடியும். பணம் கையாளும் போது கவனம் தேவை. உத்யோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும்.

சிம்மம்
எடுக்கும் காரியம் சிறிய முயற்சிக்குப் பின் நடக்கும். வீண் வாக்கு வாக்குவாதங்கள் தவிர்க்கவும். பயணங்கள் அனுகூலமான திருப்பங்களைத் தரும். தொழில், வியாபாரம் சிறக்கும்.

கன்னி
குடும்ப பொறுப்புகளில் கூடுதல் கவனம் தேவை. தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் வேலை பளு குறையும்.சந்திராஷ்டமம் இருப்பதால் கவனம்.

துலாம்
குடும்பத்தில் எதிர்பார்த்த காரியம் நிறைவேறும். மனவலிமை கூடும். யாரிடமும் கடுமையாக நடந்துகொள்ள வேண்டாம். தொழில், வியாபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும்.

விருச்சிகம்
தெளிவான முடிவுகள் எடுக்க முடியும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். இனிமையான சம்பவங்கள் நினைவுக்கு வரும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

தனுசு
குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். உறவினர்களிடத்தில் மனஸ்தாபம் வரலாம். கடன் பிரச்சனை ஓரளவு சீராகும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்

மகரம்
குடும்ப சுமை அதிகமாகும். விலகி நின்ற நபர்கள் மீண்டும் வந்து இணைவர். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.

கும்பம்
குடும்பம் கலகலப்பாக இருக்கும். எதிலும் சாதுர்யமாக பேசினால் நன்மை உண்டு. மனதில் ஏற்பட்ட விரக்தி மனப்பான்மை நீங்கும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

மீனம்
குடும்பத்தில் நன்மை உண்டாகும். மனதிற்கு பிடித்தவர்கள் சந்திக்கும் வாய்ப்பு கிட்டும். அண்டை அயலாரிடம் கவனமுடன் செயல்படல் நன்று. தொழிலில், வியாபாரம் சூடு பிடிக்கும்

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE
▼