இன்றைய ராசி பலன்கள் - (21-09-2026 திங்கள் கிழமை)

By செய்திப்பிரிவு

மேஷம்
எதையும் ஒளிவு மறைவின்றி பேசுவது நல்லது. அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். வேண்டியவர்கள் உதவ முன்வருவர். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.

ரிஷபம்
குடும்பத்தில் சந்தோஷம் நீடிக்கும். சமூக அந்தஸ்து வெகுவாக உயரும். மற்றவர்களை நம்பி எந்த பெரிய முடிவுகளை எடுக்க வேண்டாம். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும். மாலை 05:20 வரை சந்திராஷ்டமம் உள்ளது.

மிதுனம்
குடும்பத்தில் ஏற்பட்ட சலசலப்புகள் நீங்கும். கேட்ட இடத்தில் இருந்து உதவி கிடைக்கும். நண்பர்களின் ஆலோசனை கைகொடுக்கும். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.மாலை 05:20 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குகிறது.

கடகம்
இல்லற வாழ்க்கையில் இனிமை நிலவும். யாரிடமும் வாக்கு வாதம் செய்ய வேண்டாம். நண்பர்களிடம் சின்ன மனஸ்தாபம் ஏற்படும். உத்யோகத்தில் அலைச்சல் இருக்கும்.

சிம்மம்
சவால்கள், விவாதங்களை சந்திக்க நேரிடும். பொருளாதார சிக்கல் ஏற்பட்டு விலகும். திட்டமிட்டபடி பயணம் மேற்கொள்ள முடியும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.

கன்னி
சொந்த பந்தங்களால் நன்மை உண்டு. மனதில் உயர்வான எண்ணங்கள் உதிக்கும். பிரியமானவர்கள் நேசம் கரம் நீட்டுவர். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

துலாம்
குடும்பத்தில் மீது உள்ள அக்கறை அதிகரிக்கும். இஷ்டதெய்வ வழிபாடு சிறக்கும். புது முயற்சியில் இருந்த தடைகள் விலகும். உத்யோகத்தில் கூடுதல் கவனம் தேவை.

விருச்சிகம்
சாதுரியமான பேச்சு காரிய வெற்றிக்கு உதவும். மற்றவர்களுக்கு உதவி செய்யப் போய் சிக்கலில் மாட்டிக் கொள்ள வேண்டாம். எதிர்ப்புகள் தானாக அடங்கும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்

தனுசு
குடும்பத்தில் வளைந்து கொடுத்து போவது நல்லது. உறவினர்கள் வழியில் நல்லது நடக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் எளிதாக முடியும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

மகரம்
தீர்க்க முடியாத பிரச்சனைக்கு நல்ல ஒரு தீர்வு வரும். பெற்றோர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கவும். வாகனம் வாங்கும் எண்ணம் மேலோங்கும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.

கும்பம்
நெருக்கமானவர்களின் அன்பை பெற முடியும். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். கணவன் மனைவிக்குள் சண்டை போய், சமரசம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் நெருக்கடிகள் குறையும்.

மீனம்
அடுத்தவர்களை பற்றி விமர்சனம் செய்ய வேண்டாம். எதிர்காலம் பற்றிய கனவு இருக்கும். முக்கிய நபர் ஒருவரை சந்திக்க நேரிடும். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE