மேஷம்
குடும்பத்தில் பொறுப்புகள் சுமையாக வரும். வாகன பராமரிப்பு செலவுகள் கூடும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும்.சந்திராஷ்டமம் நீடிப்பதால் கவனம் தேவை
ரிஷபம்
எதிர்கால திட்டம் ஒன்று நிறைவேறும். விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளவும். எதிரிகள் பலமறிந்து செயல்படவும். தொழில், வியாபாரம் விருத்தியடையும்.
மிதுனம்
சொந்த பந்தங்களால் அனுகூலமான பலன் உண்டு. விஐபிகளின் அறிமுகம் கிடைக்கும். இரவு நேர பயணங்களை தவிர்க்கவும். புது தொழில் யோகம் அமையும்.
கடகம்
எதையும் சுயமாக யோசித்து முடிவு எடுப்பது நல்லது. திருமணம் காரியம் கைகூடும். சாட்சி கையெழுத்து போட வேண்டாம். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்
சிம்மம்
குடும்பத்தில் நல்ல ஒற்றுமை இருக்கும். அறிமுகம் இல்லாத நபர்களிடம் கவனமாக பழகவும். காரிய அனுகூலம் உண்டாகும். உத்யோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வரும்.
கன்னி
குடும்பத்தில் உங்கள் கை ஓங்கியே நிற்கும். திட்டமிடாத பயணங்களால் அலைச்சல் ஏற்படும். பழைய கடனைப் பற்றிய கவலை இருக்கும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும்.
துலாம்
மனதில் நினைத்த காரியம் விரைவில் நிறைவேறும். அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆதரவு பெருகும். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். தொழில், வியாபாரத்தில் போட்டி குறையும்.
விருச்சிகம்
குடும்பத்தில் எதிர்பாராத விஷயங்கள் நடக்கும். உறவினர்கள் சிலர் உதவி கேட்டு வருவர். தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.
தனுசு
குடும்பத்திற்காக சில சவால்களை சந்திக்க வேண்டிவரும். உடல் நலம் சீராகும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.
மகரம்
பழைய சிக்கலில் ஒன்று தீரும். யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம். வாகனங்களில் மெதுவாக செல்லவும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
கும்பம்
தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். சேமிப்பில் கவனம் செலுத்தவும். பால்ய நண்பர்களின் சந்திப்பால் மகிழ்ச்சி ஏற்படும். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.
மீனம்
தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். சேமிப்பில் கவனம் செலுத்தவும். பால்ய நண்பர்களின் சந்திப்பால் மகிழ்ச்சி ஏற்படும். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.