இன்றைய ராசி பலன்கள் - (31-08-2026 திங்கள் கிழமை)

By செய்திப்பிரிவு

மேஷம்
காரிய தடைகள் விலகும். இழுபறியாக இருந்த வேலைகள் சாதகமாக நடந்து முடியும். தேவையற்ற செலவுகளை குறைக்கவும். உடல் நலம் மேன்மை தரும். ஓய்வு எடுக்க நேரம் கிடைக்கும். உத்யோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும்.

ரிஷபம்
மனதில் மாறுபட்ட யோசனைகள் பிறக்கும்.தாரளமாக பண வரவு உண்டாகும். நினைத்த காரியம் கைகூடும்.பொதுப்பணிகளில் ஈடுபாடு உண்டாகும். பயணங்கள் தள்ளி போகும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

மிதுனம்
நல்லவர்களின் தொடர்பு நன்மையை தரும். சேமிப்பில் கவனம் செலுத்தவும்.குடும்பத்தில் நன்மைகள் பிறக்கும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.

கடகம்
குடும்ப விவகாரங்களில் பொறுமை அவசியம். யாரிடமும் கோபத்தை காட்டாதீர்கள் புது நபர்களிடம் கவனமாக பழகவும். கணவன் மனைவிக்குள் இருந்த பகைமை மாறும். தொழில், வியாபாரம் சூடு பிடிக்கும்.

சிம்மம்
குடும்ப பொறுப்புகளில் கூடுதல் கவனம் தேவை. தெய்வ பக்தி அதிகரிக்கும். வீண் செலவுகளை தவிர்க்கவும். உத்யோகத்தில் வேலை பளு குறையும்.தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் பார்க்கலாம்.சந்திராஷ்டமம் இருப்பதால் கவனம் தேவை

கன்னி
குடும்பத்திற்காக இரவு பகல் பாராமல் உழைக்க வேண்டிவரும்.உடல் அசதி காணப்படும். புதிய முயற்சிகளை தள்ளி போடவும். கடன் வாங்குவதை தவிர்க்கவும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.

துலாம்
குடும்பத்தில் சுக சௌக்கியம் உண்டாகும். எதிர்பார்த்த தகவல் வரும். சாட்சி கையெழுத்து போட வேண்டாம்.வெளியூர் பயணங்கள் மேற்க்கொள்ள வேண்டி வரும். உத்யோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும்.

விருச்சிகம்
மன நிம்மதி கிடைக்கும். குடும்பத்தில் இருந்த எதிர்ப்புகள் குறையும். சிக்கனத்தை கடைப்பிடிக்கவும். அலைச்சல், டென்ஷன் வெகுவாக குறையும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.

தனுசு
மனதில் தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். எதிர்பார்ப்புகள் நாளடைவில் பூர்த்தியாகும். நட்பு வழியில் நன்மை உண்டு. உத்யோகத்தில் ஆதரவு பெருகும்.

மகரம்
மற்றவர்களை நம்பி எதையும் செய்ய வேண்டாம். உடல்நல பிரச்சனைகள் உண்டாகும். உறவினர்கள் எதிர்பார்ப்புகளுடன் பழகுவர். திருமண காரியம் கைகூடும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

கும்பம்
நினைத்த காரியம் நிறைவேறும். விமர்சனத்தை பொருட்படுத்த வேண்டாம். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக்கொடுக்கவும். உத்தியோகத்தில் பொறுப்புகள் கூடும்.

மீனம்
பொதுப்பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். வார்த்தைகளை அளந்து பேசவும். எதிர்த்து நின்றவர்கள் விலகி நிற்பர். அரசியல் செல்வாக்கு கூடும்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE