இன்றைய ராசி பலன்கள் -(01-08-2026 சனி கிழமை)

By செய்திப்பிரிவு

மேஷம்
ஆலய வழிபாடு மன அமைதியை தரும். பயணங்களால் அலைச்சலும், ஆதாயமும் உண்டு. தேவையற்ற மனபயத்தை நீக்கவும். தொழில், வியாபாரம் மேன்மையடையும்

ரிஷபம்
குடும்ப சூழல் கலகலப்பாக இருக்கும். புது திட்டங்களை நிறைவேற்ற முடியும். உறவினர்கள் உதவி கேட்டு தொந்தரவு செய்வர். தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரியவரும்.

மிதுனம்
உங்கள் எண்ணம் எதுவாகினும் அது விரைவில் நிறைவேறும். உறவினர்களிடையே சுமுக உறவு இருக்கும். காரிய அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் ஆர்வம் கூடும்.

கடகம்
குடும்பத்தின் மீது அதிக பற்று ஏற்படும். விலை மதிப்புள்ள பொருட்களை கவனமாக கையாளவும். தேவையற்ற மனோபாயத்தை நீக்கவும். உத்யோகத்தில் நல்ல அங்கீகாரம் கிடைக்கும். சந்திராஷ்டமம் இருப்பதால் கவனம் தேவை.

சிம்மம்
யாரிடமும் உணர்ச்சி வசப்பட்டு பேச வேண்டாம். சொந்த பந்தங்கள் மத்தியில் மதிப்பு உயரும். காரிய தடை விலகும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

கன்னி
குடும்பத்தில் முக்கிய பணிகள் நிறைவேறும். உங்கள் செயலில் வேகமும், விவேகமும் இருக்கும். சமூக அந்தஸ்து உள்ளவர்களின் தொடர்பு கிட்டும். உத்யோகத்தில் எதிர்ப்புகள் அடங்கும்.

துலாம்
அடுத்தவர்களை சார்ந்து இருக்க வேண்டாம். பெற்றோர்களின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். கடன் சுமை அதிகரிக்கும். உத்யோகத்தில் சகஜமாக இருக்கவும்.இன்று ஒருவித பதட்டம்.தடுமாற்றம் உண்டாகும் யாருக்கும் வாக்குறுதிகளை வழங்க வேண்டாம்.

விருச்சிகம்
குடும்பம் குதுகலமாக இருக்கும். மற்றவர்களிடம் வார்த்தைகளை அளந்து பேசவும். உண்மையான நண்பர்களை கண்டறிய முடியும். உத்யோகத்தில் பதவி உயர்வு உண்டு.

தனுசு
குடும்ப பொருளாதார நிலை சீரடையும். அனாவசிய பேச்சுக்களை தவிர்க்கவும். வழக்கில் புதிய திருப்பம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும்.

மகரம்
குடும்ப பிரச்சனையை எதிர்கொள்ள முடியும். மன வலிமை கூடும் நாள். கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்கவும். உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும்.

கும்பம்
குடும்பத்தினர் விருப்பங்களை பூர்த்தி செய்ய முடியும். விட்டுக்கொடுத்து போகும் மனப்பான்மையை இருக்கும். திடீர் மருத்துவ செலவுகள் வரும். தொழில், வியாபாரம் சிறக்கும்.

மீனம்
மனதிற்கு ஒப்பாத செயலில் ஈடுபட வேண்டாம். புது நட்பால் நன்மை வந்து சேரும். கணவன் மனைவிக்குள் நல்ல ஒற்றுமை இருக்கும். தொழில், வியாபாரம் சிறப்பாக நடக்கும்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE