வருட கோள்களில் ராசிக்கு 3,ம் இடத்தில் சனிபகவான் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் வெளிநாடு வேலை வாய்ப்புகள் உருவாகும் ஓய்வூதிய பணங்கள் இன்சூரன்ஸ் இதுபோன்ற தொகைகள் கிடைக்கும்.
ஜூலை 17-ம் தேதி வரை சூரியன் 6'ம் இடத்தில் இருந்து பல நன்மைகளை வழங்குவார் தொழில் எதிரிகள் விலகுவார்கள், அரசாங்க அனுகூலங்கள் கிடைக்கும் தந்தை மகன் உறவு பலப்படும்.
ஜூலை 6-'ம் தேதி புதன் வக்ரகதியாக 6-'ம் இடமான உபஜெய ஸ்தானத்துக்கு வருவதால் சுறுசுறுப்பாக காணப்படுவீர்கள் புத்திசாலித்தனமாக எதையும் செய்து முடிப்பீர்கள் புதிய வேலை வாய்ப்புகளும் உருவாகும்.
இம்மாதம் சுக்கிரன் பலம் இழந்து காணப்படுவதால் பெண்களால் அவமானங்களும் அவப்பெயரும் உண்டாகும் கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டைகள் வரக்கூடும் உறவினர்களிடம் எச்சரிக்கையாக பழகுங்கள்.
இம்மாதம் செவ்வாய் 5-ம் இடத்தில் சஞ்சரிப்பதால் முன்கோபம் அதிகமாக காணப்படும் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள் சகோதரர்களிடம் விட்டுக் கொடுத்து போவது நல்லது.
6-ம் இடத்தில் குருபகவான் சஞ்சரிப்பதால் பண விரையுங்கள் உண்டாகும் தேவையின்றி கடன் சுமைகளில் மாட்டிக்கொள்ள வேண்டாம்.
2-ம் இடத்தில் ராகு சஞ்சரிப்பதால் பண விவகாரங்களில் மிகுந்த கவனம் தேவை இல்லாமல் கடன் வாங்குவதை தவிர்க்கவும்.
8-ம் இடத்தில் கேது செஞ்சாரிப்பதால் வெளியூர் பயணங்களால் உடல்நல குறைபாடுகள் வரக்கூடும் உணவு விஷயத்தில் எச்சரிக்கையாக இருங்கள்.
ஜூலை 17.18.19.சந்திராஷ்டமம்
பரிகாரம்
வாரந்தோறும் வரக்கூடிய திங்கட்கிழமைகளில் நவகிரக சந்திரனுக்கு அர்ச்சனையும் திருப்பதி ஏழுமலையான் வழிபாடும் செய்து வாருங்கள்.