ஜூலை மாதம் 2026 - துலாம் ராசி பலன்கள்

By செய்திப்பிரிவு

இந்த ஜூலை மாதம் வருட கோள்களில் சனிபகவான் ராசிக்கு 6-ம் இடமான உபஜெய ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால் போட்டி தேர்வுகளில் எளிதாக வெற்றி பெறுவீர்கள் தேக ஆரோக்கியம் காணப்படும்.

ஜூலை 17-ம் தேதி 9-ம் இடத்தில் இருந்து 10,ம் இடமான தொழில் ஸ்தானத்துக்கு வருவதால் அரசாங்க உயர் பதவியில் கிடைக்கும் அரசியல் செல்வாக்கு கூடும்.பெரிய மனிதர்கள் நட்பு பாராட்டும் கிடைக்கும்.

ராசிக்கு 5-ம் இடத்தில் ராகு இருப்பதால் பிள்ளைகளிடம் கனிவாக நடந்து கொள்ளுங்கள் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள்.
11-ம் இடமான லாபஸ்தானத்தில் கேது இருப்பதால் பண வரவு நன்றாக இருக்கும் வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும்.

இம்மாதம் செவ்வாய் 8,ம் இடத்தில் பலவீனமாக காணப்படுவதால் முன் கோபம் அதிக அளவில் காணப்படும் வீண் சண்டை சச்சரவுகள் வரக்கூடும் கவனம்.
சுக்கிரன் ஜூலை 4-ம் தேதி வரை 10-ம் இடத்தில் பலவீனமாக காணப்பட்டாலும் அதன் பிறகு 11-ம் இடத்தில் பலப்படுகிறார் பெண்களால் நல்ல பெயர் கிடைக்கும் மனைவி வழியில் ஆதாயம் பெறுவீர்கள்.

10-ம் இடத்தில் குரு சஞ்சரிப்பதால் தொழில்களுக்காக புதிய முதலீடுகள் போடவேண்டாம். 9-ம் இடத்தில் புதன் வக்ரகதியாக சஞ்சரிப்பதால் ஞாபக மறதி அதிகமாக காணப்படும் யாருக்கும் ஜாமீன் கையெழுத்துக்கள் போட வேண்டாம்.

ஜூலை 11.12. தேதிகளில் சந்திராஷ்டமம்.

பரிகாரம்!
வாரம் தோறும் வரக்கூடிய வெள்ளிக்கிழமைகளில் மஹாலட்சுமி வழிபாடு சிறப்பைத்தரும்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE