ஜூலை மாதம் 2026 - கடகம் ராசி பலன்கள்

By செய்திப்பிரிவு

இந்த ஜூலை மாத ராசி பலன்களில் ராசிக்கு 11-ம் இடமான லாபஸ்தானத்தில் செவ்வாய் அமர்ந்திருப்பதால் காரிய தடைகள் விலகும் நினைத்த காரியம் யாவும் வெற்றியை தேடித்தரும் பேட்டி தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள்.

1 மற்றும் 2-ம் இடங்களில் சுக்கிரன் பலம் பெற்று சஞ்சரிப்பதால் கணவன் மனைவி ஒற்றுமை சிறப்படையும்
தொழில் வியாபாரங்கள் செழிப்படையும் பண சேமிப்புகள் உண்டாகும்.

ராசிக்குள் குரு சஞ்சரிப்பதால் வீண் விரைய செலவுகளால் பண இழப்புகள் உண்டாகும் ஆடம்பர செலவுகளை தவிர்க்கவும். இம்மாதம் சூரியனும் 12-மற்றும் ராசிக்குள் சஞ்சரிப்பதால் வீண் பழிகள் பகை வந்து சேரும் யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். 12-ம் இடமான விரைய ஸ்தானத்தில் புதன் வக்ரகதியாக சஞ்சரிப்பதால் பண விரையங்கள் உண்டாகும்.

பங்குசந்தை முதலீடுகளில் கவனம் தேவை. 9-ம் இடத்தில் சனிபகவான் சஞ்சரிப்பதால் தந்தை மகன் உறவுக்குள் விரிசல் விழும் வீண் விவாதங்கள் தவிற்ப்பது நன்று. 8-ம் இடத்தில் ராகுவும் 2-ம் இடத்தில் கேதுவும் சஞ்சரிப்பதால் வரவுக்கு மீறிய செலவுகள் உண்டாகும்.
உழைப்பிற்க்கு ஏற்ப ஊதியம் கிடைக்காமல் போகும்.

பண விஷயங்களில் கவனமாக செயல்படவும் யாருக்கும் ஜாமின் நிற்காதீர்கள். ஜூலை 4-5 -6.ஆகிய தேதிகளில் சந்திராஷ்டமம்.

பரிகாரம்
வாரம் தோறும் வருகின்ற திங்கட்க்கிழமைகளில் நவகிரக சந்திரன் வழிபாடு செய்து வரவும் பெளர்ணமி திதியில் திருப்பதி ஏழுமலையான் தரிசனம் சிறப்பைத் தரும் நல்லதே நடக்கும்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE