ஜூலை மாதம் 2026 - மிதுனம் ராசி பலன்கள்

By செய்திப்பிரிவு

இந்த ஜூலை மாதம் 2 மற்றும் 3-ம்இடங்களில் சுக்கிரன் பலம் பெற்று சஞ்சரிப்பதால் உறவினர்கள் மூலமாக நல்ல செய்தி கிடைக்கும் புதிய வாகன யோகமும் சிலருக்கு புது வீடு கட்டும் யோகமும் உண்டு லோன் எளிதில் கிடைக்கும் கடன் பிரச்சினைகள் சிறுக சிறுக குறையும் கொடுத்த பணம் வசூல் ஆகும்.

2-ம் இடமான தனஸ்தானத்தில் குருபகவான் சஞ்சரிப்பதால் தனவரவுகள் உண்டாகும் தொழில் வியாபாரங்கள் செழிப்பை ஏற்படுத்தும்.
குடும்ப ஒற்றுமை மேலோங்கும் திருமண சுபகாரியங்கள் நடக்கும்.

வருட கோள்களில் 10'ம் இடமான தொழில் ஸ்தானத்தில் சனிபகவான் அமர்ந்திருப்பதால் புதிய பதவிகள் பதவி உயர்வு பட்டங்கள் கிடைக்கும் அன்னியமொழிக்காரர்களின் உதவிகள் கிடைக்கும் மருத்துவ செலவுகள் கட்டுக்குள் வரும்.

சூரியன் ஒன்று மற்றும் இரண்டாம் இடத்தில் சஞ்சரிப்பதால் அரசாங்க பகைகள் வரக்கூடும் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள் முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது அவசர முடிவுகளால் பணம் இழக்கும் அபாயம் உண்டு கவனம்.

செவ்வாய் 12-ம் இடமான விரைய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் ஆடம்பர செலவுகளால் கடன் சுமைகள் உண்டாகும் முன்கோபத்தை தவிர்ப்பது நன்று.
இம்மாதம் புதனும் ராசிக்குள் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் மந்த நிலை காணப்படும் எந்த ஒரு வேலையாக இருந்தாலும் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என தள்ளிப் போடுவீர்கள் ஞாபகம் மறதி அதிகமாக காணப்படும் ஆன்லைன் மற்றும் பங்குச் சந்தை முதலீடுகளை தவிர்க்கவும்.

கேது 3-ம் இடத்தில் பலப்படுவதால் மறைமுக எதிர்ப்புகள் விலகும் எதிரிகள் தொல்லைகள் குறையும். தொழில் போட்டிகள் இருக்காது
சுயசிந்தனை சிறப்புடன் செயல் வடிவைத்தரும்.

9'ம் இடத்தில் ராகு சஞ்சரிப்பதால் தந்தையாருடன் அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்படும் இதனால் மன உளைச்சலும் சங்கடங்களும் உண்டாகும் பங்காளிகளுக்குள் விட்டுக் கொடுத்துப்போவது நல்லது யாரையும் பகைத்து கொள்ளாதீர்கள்.

ஜூலை 1.2.3 தேதிகளில் சந்திராஷ்டமம்

பரிகாரம்!
வாரம் தோறும் வரக்கூடிய புதன்கிழமைகளில் லட்சுமிநரசிம்மர் வழிபாடு சிறப்பை தரும் மன அமைதிபெற
கருடாழ்வார் மூல மந்திரங்களை உச்சரிக்கவும் நல்லதே நடக்கும்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE