இந்த ஜூலை மாதம் வருட கோள்களில் சனி மற்றும் ராகு நற்பலன்களை வழங்குவார்கள் ராசிக்கு 11-ம் இடமான லாப ஸ்தானத்தில் சனி பகவான் அமர்ந்திருப்பதால் காரிய தடைகள் விலகும் நினைத்த காரியம் ஆகும் வெட்டியே தேடித் தரும் பண தேவைகள் பூர்த்தியாகும் வழக்குகள் வாபஸ் ஆகும் பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் பெறுவீர்கள்.
ராசிக்கு 10-ம் இடத்தில் ராகு அமர்ந்திருப்பதால் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் வெளிநாடு வேலைகளுக்கு முயற்சி செய்பவர்களுக்கு வெளிநாடு வேலை வாய்ப்புகள் உருவாகும் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.
ராசிக்கு 4-ம் இடத்தில் கேது சஞ்சரிப்பதால் தாயாரின் உடல் நல பிரச்சனைகள் தொந்தரவுகள் உண்டாகும் பண விரையங்கள் உண்டாகும் கவனம்.
ஜூலை 4-ம் தேதி வரை சுக்கிரன் 3-ம் வீட்டில் பலவீனமாக காணப்பட்டாலும் 4-ம் தேதிக்கு பிறகு 4-ம் இடத்துக்கு சென்று நற்பலன்களை வழங்குவார் கணவன் மனைவி உறவு பலப்படும் பண தேவைகள் பூர்த்தியாகும் கடன் சுமைகள் சிறுக சிறுக குறையும் புதிய வண்டி வாகன யோகம் உண்டாகும்.
இம்மாதம் 17-ம் தேதி வரை 2-ம் இடத்தில் சூரியன் பலவீனமாக காணப்பட்டாலும் 17-ம் தேதிக்கு பிறகு 3-ம் இடத்தில் பலப்படுகிறார் இதனால் புதிய மனிதர்கள் சந்திப்பும் அரசியல் செல்வாக்கும் உண்டாகும்.
புதிய பொலிவுடன் காணப்படுவீர்கள்.
இம்மாதம் புதன் பலவீனமாக காணப்படுவதால் ஞாபக மறதி அதிகமாக காணப்படும் சோம்பல் அதிகரிக்கும்.புதிய நபர்களுடன் எச்சரிக்கையாக இருக்கவும் பண விவகாரங்களில் கவனத்துடன் செயல்படவும்.
ராசிக்குள் செவ்வாய் இருப்பதால் அவசர முடிவுகளால் சில இழப்புகள் உண்டாகும் யாரிடமும் கோபத்தை காட்டாதீர்கள் அடுத்தவர்களின் பிரச்சனைகளில் தலையிடுவது நல்லதல்ல. சகோதரர்களிடம் விட்டுக் கொடுத்து போவது நன்று.
3-ம் இடத்தில் குருபகவான் சஞ்சரிப்பதால் ஆடம்பர செலவுகளால் பண இழப்புகள் உண்டாகும் கணவன் மனைவிக்குள் வீண் விவாதங்களை தவிர்க்கவும் குடும்ப உறவுகளிடம் விட்டுக் கொடுத்து போவது நல்லது.
ஜூலை 26-27-28 சந்திராஷ்டமம்.
பரிகாரம்:
வாரந்தோறும் வருகின்ற வெள்ளிக்கிழமைகளில் சிவாலயத்தில் இருக்கும் அம்பாளுக்கு அர்ச்சனை செய்து வாருங்கள் அமாவாசை பௌர்ணமி திதி அன்று குடும்பத்துடன் குலதெய்வ கோவிலுக்கு சென்று வாருங்கள் நல்லதே நடக்கும்.