ராசிக்கு 11-ஆம் இடமான லாப ஸ்தானத்தில் ராகு அமர்ந்து நன்மைகள் பல வழங்குவார் தன வரவுகள் நன்றாக இருக்கும் தொழில் வியாபாரங்கள் செவிப்படையும் நல்ல லாபத்தை பெறுவீர்கள் புதிய வேலை வாய்ப்புகளும் உருவாகும்.
5-ம் இடத்தில் கேது சஞ்சரிப்பதால் ஆன்மீக எண்ணங்கள் மேலோங்கும்
கோவில் தலங்களுக்கு சென்று வருவீர்கள் பிள்ளைகளுடன் கனிவாக நடந்து கொள்ளுங்கள் பகை வளர்த்து
கொள்ள வேண்டாம்.
இம்மாதம் சுக்கிரன் 4- மற்றும் 5-ம் இடங்களில் பலம் பெற்று சஞ்சரிப்பதால் கணவன் மனைவி உறவு பலப்படும் புதிய வண்டி வாகன யோகம் உண்டாகும் சிலருக்கு புது வீடு கட்டும் யோகம் உண்டு லோன் எளிதில் கிடைக்கும்.
ஜூலை மாதம் 17ஆம் தேதி வரை சூரியன் ராசிக்கு மூன்றாம் இடத்தில் அமர்ந்து யோக நிலைகளை வழங்குவார் புதிய பதவிகள் பட்டங்கள் தேடித்த்தரும் போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள் புதிய மனிதர்கள் சந்திப்பு மகிழ்ச்சியை தரும் அவர்களால் ஆதாயம் பெறுவீர்கள்.
இம்மாதம் புதன் வக்ரகதியாக 3-ம் இடத்தில் சஞ்சரிப்பதால் மனக்குழப்பங்கள் காணப்படும் முடிவுகள் எடுப்பதில் சிக்கல் நீடிக்கும் சோம்பல் அதிகரிக்கும் பண இழப்புகள் உண்டாகும் கவனம்.
2-ம் இடத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதால் முன்கோபம் அதிகமாக காணப்படும் யாரிடமும் வம்பு வைத்துக் கொள்ளாதீர்கள் தேவையில்லாத விவகாரங்களில் தலையிட வேண்டாம் சகோதரர்களுக்குள் வீண் விவாதங்கள் உண்டாகும் விட்டுக் கொடுத்துப் போவது நன்று.
ராசிக்கு 4-ம் இடத்தில் குரு பகவான் சஞ்சரிப்பதால் தொழிலுக்காக புதிய முதலீடுகள் எதையும் போடாதீர்கள் வரக்கூடிய வருமானம் வந்து கொண்டே இருக்கும் ஆடம்பர செலவுகளை தவிர்ப்பது நன்று தேவை இல்லாமல் கடன் சுமைகளில் மாட்டிக் கொள்ளாதீர்கள்.
12-ம் இடமான விரைய ஸ்தானத்தில் சனிபகவான் சஞ்சரிப்பதால் பண விரையங்கள் உண்டாகும் யாருக்கும் ஜாமீன் கையெழுத்துக்கள் போடாதீர்கள் பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில் கவனத்துடன் செயல்படவும்.
ஜூலை 24-25-26 சந்திராஷ்டமம்.
பரிகாரம்|
வாரம் தோறும் வரக்கூடிய திங்கட்கிழமைகளில் சேமவார விரதம் அனுஷ்டரித்து சிவ தரிசனம் நன்மை தரும் பிரதோஷ வழிபாடு சிறப்பை தரும் நல்லதே நடக்கும்.