இந்த மே மாதம் ராசிக்கு 3-ம் இடத்தில் சனிபகவான் சஞ்சரிப்பதால் புதிய தொழில் மூலமாக நல்ல லாபத்தை பெறுவீர்கள் கடன் சுமைகள் சிறுக சிறுக குறையும் மனதில் அமைதியையும் சந்தோஷமும் பிறக்கும். வழக்குகள் வாபஸ் ஆகும்.
மே 15-ம் தேதி வரை புதன் ராசிக்கு 4-ம் இடத்தில் பலத்துடன் சஞ்சரிப்பார் சுறுசுறுப்பாக காணப்படுவீர்கள் மந்த நிலை நீங்கும் எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் கைக்கு கிடைக்கும் பண தேவைகள் பூர்த்தியாகும்.
பங்குசந்தை முதலீடுகள் லாபகரமாக அமையும். இம்மாதம் 11-ம் தேதி வரை செவ்வாய் 3-ம் இடத்தில் பலத்துடன் சஞ்சரிப்பார் காரிய தடைகள் விலகும் எதிரிகள் தொல்லை நீங்கும் தொழில் போட்டிகள் குறையும் 11-ம் தேதிக்கு பிறகு எதிர்மறையான செயல்பாடு நடக்கும் கவனம்.
மே 14-ம் தேதி வரை சுக்கிரன் 5-ம் வீட்டில் பலமாக சஞ்சரிப்பார் இதனால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் நிலைத்திருக்கும் தனவரவுகள் நன்றாக இருக்கும் கணவன் மனைவி ஒற்றுமை சிறப்புடன் இருக்கும்.
இம்மாதம் சூரியன் 4 மற்றும் 5ஆம் இடங்களில் பலவீனத்துடன் காணப்படுவதால் தேவையில்லாத விவகாரங்கள் தலையிடாதீர்கள் அரசியல் செல்வாக்கு குறையும் அவப்பெயர் உண்டாகும் கவனம்.
ஆறாம் வீட்டில் குருபகவான் சஞ்சரிப்பதால் தொழிலுக்காக புதிய முதலீடுகள் எதையும் போடாதீர்கள் வரக்கூடிய வருமானம் வந்து கொண்டே இருக்கும் ஆடம்பர செலவுகளை குறைக்கவும்.
ராசிக்கு இரண்டாம் இடத்தில் ராகுவும் எட்டாம் இடத்தில் கேதுவும் சஞ்சரிப்பதால் மனக்குழப்பங்கள் காணப்படும் பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில் மிகுந்த கவனம் செலுத்தவும் யாருக்கும் ஜாமின் கையெழுத்துக்கள் போடாதீர்கள் உணவு விஷயத்தில் எச்சரிக்கையாக இருங்கள் முடிந்த அளவில் வீட்டு உணவுகளை உண்ணுங்கள்.
மே 21.22.23. சந்திராஷ்டமம்.
பரிகாரம்!
வாரந்தோறும் வரக்கூடிய சனிக்கிழமைகளில் சனிபகவானுக்கு என் தீபம் ஏற்றி வழிபாடு செய்த வரவும் கால்நடைகளுக்கும் இயலாதாவர்களுக்கும் உணவும் உடையும் வாங்கித் தாருங்கள் நல்லதே நடக்கும்.