மே மாதம் 2026 - துலாம் ராசி பலன்கள்!

By செய்திப்பிரிவு

இந்த மே மாதம் ராசிக்கு 9-ம் இடமான பாக்ய ஸ்தானத்தில் குரு பகவான் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும் திருமண தடைகள் விலகும் குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியினருக்கு குழந்தை பாக்கியம் தடையின்றி கிடைக்கும் தொழில் வியாபாரங்கள் செழிப்படையும் வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சியும் ஆதாயம் கிடைக்கும்.

ஆறாம் இடமான உபஜெய ஸ்தானத்தில் சனிபகவான் சஞ்சரிப்பதால் புதிய தொழில் மூலமாக நல்ல லாபம் கிடைக்கும் வேலை இழந்தவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் வழக்குகள் வாபஸ் ஆகும்.

இம்மாதம் சுக்கிரன் 8-ம் 9-ம் இடங்களில் பலம் பெற்று சஞ்சரிப்பதால் கணவன் மனைவி ஒற்றுமை மேலோங்கும் குடும்ப உறவுக்குள் இருந்து வந்த சங்கடங்கள் நீங்கும் உறவினர்கள் உதவிகள் கிடைக்கும்.

புதிய வண்டி வாகன யோகமும் உண்டு. 11-ம் இடமான லாப ஸ்தானத்தில் கேது பகவான் சஞ்சரிப்பதால் மருத்துவ விரைய செலவுகள் கட்டுக்குள் வரும் ஆன்மீக எண்ணங்கள் உதிக்கும் கோயில் தலங்களுக்கு சென்று வருவீர்கள்.

மே 15ம் தேதி புதன் 8-ம் வீட்டில் பலம் பெறுவதால் திடீர் தன வரவுகள் உண்டாகும். பண தேவைகள் பூர்த்தியாகும்.
சூரியன் 7 மற்றும் 8-ம் இடங்களில் பலவீனமாக சஞ்சரிப்பதால் யாரையும் பகைத்து கொள்ளாதீர்கள் உடல் உஷ்ணம் காணப்படும் வெக்கை நோய்கள் வரக்கூடும் கவனம்.

இம்மாதம் 11-ம் தேதி வரை 6-ம் இடத்தில் செவ்வாய் பாலத்துடன் சஞ்சரிப்பார் பிறகு 7-ம் இடத்தில் பலவீனம் அடைகிறார் முன் கோபத்தை தவிர்க்கவும்.
அவசர முடிவுகள் வேண்டாம்.

5ம் இடத்தில் ராகு இருப்பதால் தந்தை மகன் உறவுக்குள் விரிசல் விழும் வீண் விவாதங்களை தவிர்க்கவும்.
மே 17.18.சந்திராஷ்டமம்.

பரிகாரம்
வாரம் தோறும் வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமைகளில் சிவாலத்தில் உள்ள நவகிரக சூரியன் வழிபாடு செய்து வரவும் பிரதோஷ சிவன் வழிபாடும் சிறப்பை தரும் நல்லதே நடக்கும்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE