மே மாதம் 2026 - சிம்மம் ராசி பலன்கள்!

By செய்திப்பிரிவு

இந்த மே மாதம் ராசிக்கு 11-ம் வீடான லாப ஸ்தானத்தில் குரு பகவான் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் நிலைத்திருக்கும் திருமண சுப காரியங்கள் நடக்கும் தடைபட்ட குழந்தை பாக்கியம் தடையின்றி கிடைக்கும் பண சேமிப்புகள் உண்டாகும்.

மே மாதம் 15-ம் தேதிக்கு பிறகு சூரியன் 10 -ம் வீட்டில் பலம் அடைகிறார் 10 -ல் சூரியன் அதிகாரங்களும் பதவிகளும் பட்டங்களும் கொடுப்பார் புதிய பொலிவுடன் காணப்படுவீர்கள் புதிய மனிதர்களின் சந்திப்பு நிகழும் அவர்களால் ஆதாயம் கிடைக்கும்.

மே 14ம் தேதி வரை 10-ம் இடத்தில் சுக்கிரன் பலவீனமாக காணபட்டாலும் பிறகு 11-ம் வீட்டில் பலப்படுகிறார் குடும்பத்தில் இருந்து வந்த பிணக்குகள் நீங்கும் குடும்ப ஒற்றுமை மேலோங்கும் தொழில் வியாபாரங்கள் செழிப்படையும் நல்ல லாபத்தை பெறுவீர்கள்.
இம்மாதம் செவ்வாய் 8 மற்றும் 9-ம் இடங்களில் பலவீனப்படுவதால் முன்கோபம் அதிகமாக காணப்படும் யாரையும் எடுத்தெறிந்து பேசி விடாதீர்கள் சகோதரர்களிடம் விட்டு கொடுத்து போகவும் வாக்குவாதங்கள் தவிர்க்கவும்.

இம்மாதம் 15-ம் தேதி வரை புதன் ஒன்பதாம் இடத்தில் பலவீனப்பட்டாலும் மே 15க்கு பிறகு பத்தாம் இடத்து சூரியனுடன் சேர்ந்து சூரிய புதாத்ய யோகம் தருகிறார் இதனால் திடீர் தன வரவுகள் உண்டாகும் பண பிரச்சனைகள் தீரும் சுறுசுறுப்பாக காணப்படுவீர்கள்.

அஷ்டம ஸ்தானமான எட்டாம் இடத்தில் சனிபகவான் சஞ்சரிப்பதால் பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில் மிகுந்த கவனத்தை செலுத்தவும் புதிய மனிதர்களும் எச்சரிக்கையாக பழகவும் யாருக்கும் ஜாமீன் கையெழுத்துக்கள் போட வேண்டாம்.

ராசிக்குள் கேதுவும் ஏழாம் இடத்தில் ராகுவும் சஞ்சரிப்பதால் மன குழப்பங்கள் காணப்படும் யாரை நம்புவது என தடுமாற்றம் ஏற்படும் கணவன் மனைவிக்குள் தேவையற்ற விவாதங்கள் தவிர்க்கவும் உணவு விஷயத்தில் கவனம் செலுத்தவும் வெளியிட உணவுகளை தவிர்க்கவும்.
மே 13.14. சந்திராஷ்டமம்.

பரிகாரம்
வாரந்தோறும் வரக்கூடிய புதன்கிழமைகளில் லட்சுமி நரசிம்மர் அல்லது யோக நரசிம்மர் வழிபாடு செய்து வரவும் பசுக்களுக்கு உணவு வழங்கவும் நல்லதே நடக்கும்

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE