மே மாதம் 2026 - ரிஷபம் ராசி பலன்கள்!

By செய்திப்பிரிவு

இந்த மே மாதம் ராசிக்கு 2-ம் இடத்தில் குருபகவான் சஞ்சாரம் செய்வதால் குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும் திருமணம் குழந்தை பாக்கியம் தடையின்றி கிடைக்கும் தொழில் வியாபாரங்கள் செழிப்படையும் நல்ல லாபத்தை பெறுவீர்கள்.

ராசிக்கு 11ம் இடமான லாப ஸ்தானத்தில் சனிபகவான் சஞ்சாரம் செய்வதால் நீண்ட ஆயுளையும், ஆரோக்கியமான வாழ்க்கையையும் பெறுவீர்கள். உடலில் வலிமை உண்டாகும்.

ஒரு சிறந்த தொழில்முனைவோர், அரசியல்வாதி அல்லது நிர்வாகியாக உயரும் வாய்ப்பு உண்டு. உங்கள் இலக்குகளை அடைய விடாமுயற்சியுடன் செயல்படுவீர்கள்.

உங்களுக்கு வாகன யோகம் உண்டாகும், சொத்துக்கள் சேரும். சமூக அந்தஸ்து: சமூகத்தில் நல்ல செல்வாக்கும், புகழும் கிடைக்கும்.

ராசிக்கு 10-ம் இடமான தொழில் ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதால் வெளிநாடு வேலை வாய்ப்புகள் உருவாகும் உத்தியோகத்தில் நல்ல பெயரும் சம்பள உயர்வும் உண்டாகும்.

இம்மாதம் சுக்கிரன் 1- மற்றும் 2-ம் இடங்களில் பலப்படுவதால். கணவன் மனைவி உறவு பலப்படும். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவார்கள். பண சேமிப்புகள் உண்டாகும்.

மே 11-ம் தேதி வரை செவ்வாய் 11-ம் வீட்டில் பலப்படுகிறார் தைரியம் துணிச்சல் எதையும் எதிர்கொள்ளும் ஆற்றல் பிறக்கும்.
போட்டி தேர்வுகளில் வெற்றிபெறுவீர்கள்.

புதன் பலவீனமாக காணப்படுவதால் ஞாபகமறதி அதிகமாக காணப்படும் பங்குசந்தை முதலீடுகள் நஷ்டத்தை உண்டு பண்ணும்.
புதிய நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும்.

இம்மாதம் சூரியனும் 12- மற்றும் ராசிக்குள் பலவீனப்படுவதால்.
பெரிய மனிதர்களை பகைத்து கொள்ளாதீர்கள் தேவையற்ற விவகாரங்களில் தலையிடாதீர்கள்.

கேது 4-ம் இடத்தில் பலவீனப்படுவதால் தாயாரின் உடல் நலத்தில் கவனம் செலுத்தவும் வீண் விவதாங்களை தவிர்க்கவும்.
மே 5.6.7 தேதிகளில் சந்திராஷ்டமம்.

பரிகாரம்!
வாரம் தோறும் வரக்கூடிய வெள்ளிக்கிழமைகளில் மஹாலட்சுமி வழிபாடு செய்து வரவும் சுமங்கலி பெண்களுக்கு
மஞ்சள் குங்குமம் வளையல் தானமாக கொடுக்கவும் நல்லதே நடக்கும்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE