மே மாதம் 2026 - மேஷம் ராசி பலன்கள்!

By செய்திப்பிரிவு

ராசிக்கு 11-ம் இடமான லாப ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதால் தன வரவுகள் நன்றாக இருக்கும்.

தொழில் வியாபாரங்கள் செழிப்படையும் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். பண தேவைகள் பூர்த்தியாகும். நினைத்த காரியங்கள் யாவும்
வெற்றி பெறும்.

மே 15-ம் தேதி சூரியன் 2-ம் வீட்டுக்கு செல்வதால் அரசியல் செல்வாக்கு கூடும் அரசாங்க உதவிகள் கிடைக்கும் புதிய சொத்துக்கள் வாங்கும் யோகம்
உண்டாகும்.

மே 14ம் தேதி வரை சுக்கிரன் 2ம் இடத்தில் பலம் பெறுவதால் கணவன் மனைவி உறவு பலப்படும்.

பிரிந்த சொந்தங்கள் ஒன்று சேருவார்கள் குடும்பத்தில் அமைதி நிலவும்.

இம்மாதம் புதன் 1 மற்றும் 2-ம் இடத்தில் பலவீனப்படுவதால் ஞாபக மறதி அதிகமாக காணப்படும். சோம்பல் அதிகரிக்கும்
பண விவகாரங்களில் கவனம் தேவை.

12-ம் இடமான விரைய ஸ்தானத்தில் சனிபகவான் சஞ்சரிப்பதால் வீண் விரையங்கள் தண்ட செலவுகள் வரக்கூடும்.
எச்சரிக்கையாக இருக்கவும்.

இம்மாதம் செவ்வாய் 12ம் இடத்தில் இருப்பதால் முன் கோபத்தை தவிர்க்கவும் அவசர முடிவுகளால் சில இழப்புகள் வரக்கூடும் கவனம்.
5-ம் இடத்தில் கேது சஞ்சரிப்பதால் பிள்ளைகளால் விரையங்கள் உண்டாகும் தாய்+தந்தை மகள் மகன் களுக்குள் கருத்து மோதல்கள் உருவாகும்.
வீண் விவாதங்களை தவிர்க்கவும்.

குருபகவான் அதே 3-ம் இடத்திலே சஞ்சரிப்பதால் உத்யோகத்தில் அமைதி நிலவும் தொழில் வியாபாரத்தில் மிதமான வருமானம் வரும் புதிய முதலீடுகள் தவிர்த்தவும்.

மே 3.4.5 தேதிகள் சந்திராஷ்டமம்.

பரிகாரம்
வாரம் தோறும் வரக்கூடிய சனிக்கிழமைகளில் சனிபகவானுக்கு எள் தீபமேற்றி வழிபாடு செய்து வரவும்
இயலாதவர்களுக்கு உணவு வழங்கவும் நல்லதே நடக்கும்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE