இன்றைய ராசி பலன்கள் - 20.04.2026 திங்கள் கிழமை

By செய்திப்பிரிவு

மேஷம்
=காரிய தடைகள் விலகும்.இழந்த செல்வாக்கை மீண்டும் பெற முடியும். பழைய சிக்கலில் ஒன்று தீரும். யாரை நம்புவது என்ற மனக்குழப்பம் ஏற்படும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.தொழில் வியாபாரம் சிறப்படையும்.

ரிஷபம்
அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆதரவு பெருகும். நெருக்கமானவர்களிடம் சின்ன மனஸ்தாபம் ஏற்படும்.கணவன் மனைவிக்குள் புரிதல் இருக்கும். காரிய அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரம் சீரான பாதையில் செல்லும்.

மிதுனம்
உற்சாகமாக காணப்படுவீர்கள்.தெய்வ அனுகூலத்தால் நினைத்தது நடக்கும். புது பொருள் சேர்க்கை உண்டாகும். பயணங்கள் நல்லவிதமாக அமையும். உத்யோக மாற்றம் ஏற்படும்.

கடகம்
சவால்கள், விவாதங்களில் வெற்றி கிடைக்கும். தேக ஆரோக்கியம் பலம் பெறும். முன் கோபத்தை தவிற்க்கவும்.பெற்றோர்களிடம் வாக்குவாதம் செய்ய வேண்டாம். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும்.

சிம்மம்
குடும்ப விவகாரங்களில் மற்றவர்கள் தலையீட்டை அனுமதிக்க வேண்டாம். எதிர்பார்த்து காத்திருந்த நல்ல செய்தி வரும். மருத்துவ செலவுகள் கூடும். உத்யோகத்தில் பணிச்சுமை குறையும் வெளியூர் பயணத்தால்
ஆதாயம் பெறுவீர்கள்.

கன்னி
எதையும் தாங்கும் மனவலிமையை உண்டாகும். முக்கிய நபர்களின் சந்திப்பால் மன மகிழ்ச்சி ஏற்படும். சொத்து விவகாரத்தில் இழுபறி இருக்கும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.தொழில் வியாபாரங்கள் சிறப்படையும்.

துலாம்
குடும்பத்தில் ஏற்பட்ட சலசலப்புகள் நீங்கும். கணவன் மனைவிக்குள் அன்பு அதிகரிக்கும்.உறவினர்கள் உதவி கேட்டு வருவர். யாருக்கும் ஜாமீன் கையெழுத்துக்கள் போட வேண்டாம்.மனதில் புது தெம்பும், தைரியமும் அதிகரிக்கும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.
சந்திராஷ்டமம் இருப்பதால் கவனம் தேவை.

விருச்சிகம்
குடும்பத்தில் புது திட்டங்கள் நிறைவேறும். நட்பு வழியில் நல்ல செய்தி வரும். எதிர்ப்புகள் அடங்கும். தேவையின்றி கடன் வாங்குவதை தவிற்க்கவும்.
தொழில், வியாபாரத்தில் பெரியளவில் மாற்றம் வரும்.

தனுசு
குடும்ப பாரம் கூடும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். கோர்ட் வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்.
புதிய நபர்களிடம் எச்சரிக்கையாக பழகவும்.ஜாமின் கையெழுத்துகள் தவிர்க்கவும்.தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு.

மகரம்
குடும்ப நலனில் அக்கறை கொள்ளவும்.கணவன் மனைவி உறவு பலப்படும்.தர்ம காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். நண்பர்களின் உதவிகள் கிடைக்கும் மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெறும்.

கும்பம்
இஷ்ட தெய்வ வழிபாடு சிறப்பாக அமையும். உறவினர்கள் வழியில் சில நெருக்கடிகள் வரும். பண விவகாரங்களில் மிகுந்த கவனம் தேவை.கணவன் மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். தொழில், வியாபாரம் சிறக்கும்

மீனம்
குடும்ப உறவு முறைக்குள் இருந்துவந்த பகைகள் அகலும் குடும்பத்தாரின் எண்ணங்களை பூர்த்தி செய்ய முடியும். விருந்தினர்கள் வருகை இருக்கும். கடன் சுமை இருக்கும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE