அட்சய திருதி பூஜைக்கு என்ன செய்யலாம்?

By தேஜஸ்

'அட்சயம்' என்பது அள்ள அள்ள குறைவில்லாதது என்பதைக் குறிக்கும். இந்த நாளில் தொடங்கும் எந்த நல்ல செயலும் பல மடங்கு வளர்ந்து நன்மை தரும் என நம்பப்படுகிறது. விஷ்ணுவின் அவதாரமான பரசுராமர் அவதரித்ததும், குபேரன் இழந்த செல்வத்தை மீட்டதும் இந்த நாளில்தான் என ஐதீகம் கூறுகிறது. அதனால், இந்த நாள் செல்வ வளர்ச்சிக்கும், புதிய தொடக்கங்களுக்கும் உகந்ததாக பார்க்கப்படுகிறது.

இந்த நாளில் அட்சய திருதியை பூஜைக்கு முக்கிய இடம் உண்டு. பித்தளை அல்லது வெண்கலப் பானையை சுத்தம் செய்து, குங்குமம் வைத்து அலங்கரிக்கிறார்கள். பானையில் பச்சரிசி நிரப்பி, அதன் மேல் தங்க நாணயம் அல்லது நகை வைப்பதும் வழக்கம். இதை லட்சுமி வடிவமாக கருதி நெய் தீபம் ஏற்றி, சர்க்கரைப் பொங்கல் வைத்து வழிபடுகிறார்கள். இதனால் வீட்டில் அன்னபூரணி அருளும், செல்வ வளமும் நிலைக்கும் என நம்பிக்கை நிலவுகிறது.

இந்த நாள் தங்கம் வாங்குவதற்காக மட்டுமல்ல, தானத்தின் மதிப்பை உணர்த்தும் நாளாகவும் பார்க்கப்படுகிறது. ஏழைகளுக்கு குடை, செருப்பு, நீர்மோர் வழங்குவது புண்ணியமாக கருதப்படுகிறது. ஆடை, பழங்கள் தானம் செய்வதால் உடல்நலம் மற்றும் வாழ்க்கை முன்னேற்றம் கிடைக்கும் என மக்கள் நம்புகிறார்கள். குறிப்பாக தானம் செய்வது குடும்பத்திற்கு நீண்டநாள் நலன்களை தரும் என்பது பரவலான நம்பிக்கையாக உள்ளது.

தங்கம் வாங்க முடியாதவர்கள்
வெள்ளி நாணயம் வாங்கலாம்
பச்சரிசி.கல்உப்பு. மல்லிகைபூ.
வாங்கவும்.

வீட்டில் உள்ள அட்சய பாத்திரம் அரிசி பானைதான் அரிசி பானை நிரப்பவும்
லட்சுமி கடாஷ்ம் உண்டாகும். செல்வம் செழிக்கும்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE