ஜாதகப்படி சந்திரன் எந்த நிலையில் அமர்ந்தால் மன அழுத்தம் குறையும்?

By செய்திப்பிரிவு

ஒருவரின் பாரம்பரிய வாழ்க்கை முறை வாழ்வியல் பிரச்சினைகளை மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. மனிதன் ஒரு சமூக விலங்கு. வீட்டிலும் வெளி இடங்களிலும் கூட்டமாகவே இருந்து பழகி விட்டனர். திடீரென தனித்திரு என்று ஒருவரை ஒதுக்கி வைப்பதால் அவருக்கு மன அழுத்தம் அதிகமாகி விடும். உறங்குவது, சாப்பிடுவது வேலை செய்வதில் ஒருவித மாற்றங்களை ஏற்படுத்தும். கோபம், தூக்க கலக்கம், மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இது கடந்த காலங்களில் சார்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகளுக்கும் இருந்தது தெரிய வந்துள்ளது.

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்களை நோய்கள் தாக்காது அதே நேரத்தில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் உளவியல் ரீதியாகவும் தெம்பாக இருக்க வேண்டியது அவசியம். இந்த தனிமை ஆரோக்கியமான குடும்பத்தை உருவாக்கவும், ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கவும்தான் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். வைட்டமின் சி உணவுகளை சாப்பிடுங்கள். எலுமிச்சை, ஆரஞ்சு ஜூஸ், சாப்பிடலாம். தியானம் யோகா செய்யலாம், மூச்சுப்பயிற்சி செய்யுங்கள் மன அழுத்தம் குறையும். நல்ல இசையை கேட்பதன் மூலமும் புத்தகம் படிப்பதன் மூலமும் மன அழுத்தத்தை குறைக்கலாம்.

ஒருவரின் மன நிலையை தீர்மானிக்கும் கிரகம் சந்திர பகவான். ஒரு ஜாதக அமைப்பில் சந்திரன் நல்ல நிலையில் அமரும்பொழுது , ஜாதகரின் மன நிலை மிகவும் சிறப்பாக அமைந்து விடுகிறது. ஒருவருடைய ஜாதகத்தில் சந்திரன் மறைவு ஸ்தானங்களில் நிற்க்கும்பொழுது மனநிலை பாதிப்புகள் ஏற்படுகின்றது. வளர்பிறை காட்டிலும் தேய்பிறையில் சந்திர மறைவு தன்மை அதிக பலம் உள்ளது. மறைவு ஸ்தானத்தில் சந்திரன் நிற்கும் காலத்தில் மனதில் தெளிவின்மையால் மன உளைச்சல் ஏற்பட்டு அதன் காரணமாக கோபப்படுதல், பொறுமை இன்மையால் எரிச்சல், அடுத்தவரிடத்தில் தேவையற்ற கோபம், இல்லறத்தில் சண்டை ஏற்படும்.

ஒருவருடைய மன நிலை மற்றும் புத்திசாலிதனம், ஆழ்மனதில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவற்றை குறிக்கும் பாவம் பூர்வ புண்ணியம் எனப்படும் ஐந்தாம் பாவம் ஆகும். ஐந்தாம் பாவம் கெடாமல் இருப்பது நல்ல மனநிலைக்கு முக்கியமானதாகும். ஐந்தாம் வீட்டில் அசுப தொடர்புகள் ஏற்படும்போது அது மனதினை பாதிக்கின்றது. ஒருவருடைய ஜாதகத்தில் லக்னம், லக்னாதிபதி பலமாக நிற்பது, காலபுருஷனுக்கு லக்னமாகிய மேஷத்தில் அசுப கிரஹங்கள் தொடர்பு இன்றி இருப்பது, அதன் அதிபதி செவ்வாய் பலமாக இருப்பது, ஆத்ம காரகனாகிய சூரியன் அசுபத்தன்மை இன்றி நல்ல நிலையில் பலம் பெற்று இருப்பது ஆகியவை ஜாதகரை மன நோயில் இருந்து காக்கும் அம்சங்களாகும். குல தெய்வத்தையும், முன்னோர்களையும் மனதளவில் நினைத்து வழிபடுங்கள். ராகு கேது வழிபாடும் நன்மை செய்யும் மன அழுத்தம் போக்கும்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE