இன்றைய ராசி பலன்கள் - 16.04.2026 வியாழன் கிழமை

By செய்திப்பிரிவு

மேஷம்
பண வரவு நன்றாக இருக்கும். குடும்பத்தில் பொருளாதார நெருக்கடி குறைந்து நிலைமை சீரடையும். புது நட்பு மலரும். வாழ்க்கைத்துணை மூலம் மகிழ்ச்சி உண்டாகும். உத்யோகத்தில் போட்டி இருக்கும்.
தொழில் வியாபாரங்கள் லாபத்தை தரும்.

ரிஷபம்
மனதில் நினைத்தது நடக்கும்.விட்டு சென்ற உறவு தேடி வரும். பயணங்களால் வீண் அலைச்சல் ஏற்படும். இழுபறியில் இருந்த காரியங்கள் முடிவுக்கு வரும். தொழில், வியபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும்.

மிதுனம்
புதுமையான திட்டங்களை செயல்படுத்த முடியும். வெளியாட்களின் உதவி கிடைக்கும். எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.தொழில் வியாபாரங்கள் செழிப்த்தரும்

கடகம்
சமுதாயத்தில் நல்ல அந்தஸ்து கிடைக்கும். ஆன்மீகம் சார்ந்த ஈடுபாடு மனநிறைவை தரும். புதிய வண்டி வாகனம் வாங்கும் யோகம் உண்டு. பண தேவைகள் பூர்த்தியாகும். வேண்டியவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் ஏற்படும். தொழில், வியாபாரம் சிறக்கும்.

சிம்மம்
காரிய தடைகள் விலகும் சுறுசுறுப்பாக காணப்படுவீர்கள்.
உங்கள் செயல்களில் வேகமும், விவேகமும் இருக்கும். சொந்த பந்தங்களால் ஆதாயம் உண்டு. தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும். தேவையின்றி கடன் வாங்காதீர்கள்.சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமும் நிதானமும் அவசியம்.

கன்னி
குடும்பத்தில் ஏற்பட்ட சிக்கல் தீரும்.கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும்.தொழில் போட்டிகள் குறையும். எதிரிகள் ஒதுங்கி நிற்பர். வாகன பராமரிப்பு செலவு கூடும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.தொழில் வியாபாரத்தில் புதிய முதலீடுகளை தவிற்க்கவும்.

துலாம்
பொழுதுபோக்கு, ஆடம்பரங்களுக்கு அதிகம் செலவழிக்க வேண்டாம். மறைமுக எதிர்ப்புகள் வந்து போகும். புது வீடு மாற்றம் ஏற்படும்.புதிய வாகனம் வாங்கும் கனவு நிறைவேறும். உத்யோகத்தில் ஆதரவு பெருகும்.

விருச்சிகம்
முக்கிய வேலைகள் சீக்கிரத்தில் முடியும். உறவினர்கள் உதவி கேட்டு வருவர். மனதிற்கு பிடித்ததை மட்டும் செய்யவும். உத்யோகத்தில் நல்ல அங்கீகாரம் கிடைக்கும்.தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த போட்டிகள் குறையும் எதிரிகள் விலகி நிற்பார்கள்.

தனுசு
குடும்ப விருப்பங்களை நிறைவேற்ற முடியும். பண நெருக்கடி குறையும்.யாருக்கும் எந்த உறுதி மொழியும் தர வேண்டாம்.பண விவகாரங்களில் கவனம் தேவை. எதிர்ப்புகள் தன்னால் அடங்கும். புது தொழில் யோகம் அமையும்.தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.

மகரம்
மகர ராசி நண்பர்களே, குடும்பத்தில் நல்லது நடக்கும். அண்டை அயலாருடன் நட்புறவு ஏற்படும். கடன் தொந்தரவு இருக்கும். யாரையும் முழுமையாக நம்பாதீர்கள் தொழில், உத்யோகத்தில் நற் பெயர் கிடைக்கும்.வியாபாரம் முன்னேற்றம் அடையும்.

கும்பம்
மன அமைதி கிடைக்கும் ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். குலதெய்வ வழிபாடு சிறக்கும். நவீன பொருள் சேர்க்கை உண்டாகும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

மீனம்
குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கும். எடுத்த காரியத்தில் வெற்றி உண்டகும். வெளிவட்டாரத்தில் நிறைய தொடர்புகள் கிடைக்கும்.புதிய நபர்களின் சந்திப்பு நிகழும்.நினைத்த காரியம் கைகூடும். தொழில், வியாபாரம் சிறக்கும்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE